7 Jun 2020

மக்களை உசுப்பேத்தி, வாக்குப் பெற்றவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள், வாக்களித்தவர்கள் கூலித் தொழில் செய்கின்றார்கள் - வெள்ளிமலை.

SHARE
மக்களை உசுப்பேத்தி, வாக்குப் பெற்றவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள், வாக்களித்தவர்கள் கூலித் தொழில் செய்கின்றார்கள் - வெள்ளிமலை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் (நானும் அந்தக் கட்சியில் இருந்தவன் என்ற வகையில்) உதட்டால் தேசியம் பேசிப் பேசி மக்களை உசுப்பேத்தி, வாக்குப் பெற்றவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள், வாக்களித்தவர்கள் கூலித் தொழில் செய்கின்றார்கள்.  இதனை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் ஞானமத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..


தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற சம்மந்தன் ஐயா சுமந்திரன், மவை சேனாதிராசா, துரைராசசிங்கம், போன்றவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் உற்றார் உறவினர்கள் அல்ல. மாறாக நான்  1965 ஆம் ஆண்டிலிருந்து கட்சியை வளர்த்து வந்தவன். அவர்கள் கூறுகின்றார்கள் கட்சி என்னை வளர்த்ததாக தெரிவிக்கின்றனர் அதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நான்தான் கட்சியை வளர்த்திருக்கின்றேன்.

நான் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியில் உபதலைவராக பதவி வகித்தபோது என்னை அக்கட்சியிலிருந்து விலகி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இணையுமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் எனது ஆதரவாளர்களுடன் நான் 2017 ஆம் ஆண்டு நான் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகிய கடித்ததை கொடுத்திருந்தேன். பின்னர் 2017 இரண்டாம் மாதம் இருந்து என்னை தமிழரசுக் கட்சியில் இணைப்பதாகத் தெரிவித்து, சுமார் ஒரு வருடகாலமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஏமாற்றி வந்தார். பின்னர் எனது விண்ணப்பம் தொடர்பில் செயலாளரிடம் கேட்டப்போது உங்களை கட்சியில் உள்வாங்க முடியாது, நீங்கள் மாற்று வழியைப் பார்க்குமாறு கூறினார். 

எனக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அங்கத்துவம் மறுக்கப்பட்டதை அக்கட்சியின் உயர் பீடத்திற்கும் தெரிவித்திருந்தேன் பின்னர் 2017 இல் இருந்து 2020 நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரைக்கும், நான் எந்தக் கட்சிக்குப் பின்னால் போகாமலும், அமைதியாக இருந்தேன். பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர் பீடத்தினர் என்னை வந்து கேட்டுக் கொண்டதற்கிணங்கள அக்கட்சியின் இணைந்து கொண்டேன். மட்டக்களப்பில் உருவாகிய கட்சி என்ற ரீதியிலும், ஏனைய தேசிய சிங்களக் கட்சிகளில் தேர்தலில் களமிறங்கிளால் என்னை எட்டப்பன் என பட்டம் சூட்டுவார்கள் என்ற ரீதியிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இணைந்து கொண்டேன். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் (நானும் அந்தக் கட்சியில் இருந்தவன் என்ற வகையில்) உதட்டால் தேசியம் பேசிப் பேசி மக்களை உசுப்பேத்தி, வாக்குப் பெற்றவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள், வாக்களித்தவர்கள் கூலித் தொழில் செய்கின்றார்கள்.  இதனை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். 

நாடு கேட்டோம், தமிழ் நாடுகேட்டோம், ஒன்றுபட்ட நாட்டுக்கு;ள சமஸ்ட்டி கேட்டோம், மாறாக நாங்கள்தான் சந்திரிக்கா, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரைப் அவர்களின் பதவி நிலைகளுக்குக் கொண்டு வந்தோம் என மார் தட்டிப் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இறுதியாக கல்முனை பிரதேச செயலகத்திற்கு கணக்காளரைக்கூட பெற்றுத்தர முடியவில்லை.  நான் தெரிவிக்கின்றேன் தலைவர் பிரபாகரனால் பெற்றுத்தர முடியாத ஈழத்தையோ, உரிமையையே எவராலும் பெற்றுத் தர முடியாது, என்பதை ஆணித்தரமாகக் கூறுகின்றேன். 

கொரோனா என்ற பொல்லாத நோயால் மக்கள் வேதனை அடைந்த கெண்டிருக்கின்றார்கள் இந்நிலையில் தேல்தல் பொருதத்தமற்ற நிலையாக இருந்தாலும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் தேர்தல் நடாத்தாமல் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது. அந்த அடிப்படையில் இன்னும் 2 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும் என நினைக்கின்றேன். அவ்வேளையில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். கடந்த காலங்களிலிருந்த தேசியம் பேசிப் பேசி எமது இனத்தைத் தேய்த்தது போதும், எதிர்காலத்தில் உரிமைக்காகவும், அபிவிருத்திக்காகவும், குரல் கொடுத்து மக்களையும், மண்ணையும், பாதுகாக்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மறுமலர்ச்சி அடைய வேண்டும். என்பதால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழியமைக்க வேண்டும். என தெரிவித்த அவர் 


மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானோடு நானும் அக்காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் இருந்தேன். அவரோடு நன்றாகப் பழகியவன் என்ன ரீதியில் அன்னாரது இழப்பு மலையகத்திற்கு மாத்திரமல்ல உலகம் வாழ் தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும். ஆனாலும் மலையத்தில் இருக்கின்ற அரசியல் தலைமைகள் அவர் விட்டுச் சென்ற பணியை முன்னெடுக்க வேண்டும். அவரது எண்ணம்போல் அப்பகுதி மக்களுக்கு 1000 ரூபா வேதனைத்ததைப் பெற்றுக் கொடுக்க வேண்டும், எனவும் வேண்டுகோள் விடுத்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: