21 Jun 2020

தமிழ் மக்களின் பிரதேச அபிவிருத்தியும், உரிமையும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - கோபிநாத்.

SHARE
(சுதா)

தமிழ் மக்களின் பிரதேச அபிவிருத்தியும், உரிமையும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - கோபிநாத்.

வடகிழக்கு தமிழ் மக்கள்  சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு உரிமையும், அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.


இவ்வாறு கிழக்கு இளைஞர் முன்னணியின் தலைவரும், தேசிய நல்லிணக்க அரச கரும மொழிகள் அமைச்சின் முன்னான் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டு மாவட்ட தற்போதைய நாடாளுமன்ற வேட்பாளருமான கணேசமூர்த்தி கோபிநாத் சனிக்கிழமை (20) பட்டிப்பளைப் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… போது கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டு மாவட்டமானது அபிவிருத்தியில் பின்னோக்கிச் செல்கின்றது. காரணம் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியினை முன்னெடுக்கக் கூடிய அரசியல் தலைமைகள் கிழக்கு மாகாணத்தில் இல்லாமை பாரிய குறையாகவுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு மக்களின் தேர்வு ஊடாக பாராளுமன்றம் செல்லும் மக்கள் பிரதி நிதிகளுக்கு இருக்க வேண்டும். தற்போது தமிழ்ச் சமூகம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பொருளாதாரத்திலும் பின்னோக்கியே செல்கிறது.

மக்களின் வாக்கினைப் பெற்று பாராளுமன்றம் சென்றதும் வீர வசனங்களை உரைத்து திரைமறைவில் மறையும் அரசியல் கலாசாரத்திற்கு தமிழ் மக்கள் இனிமேலும் வாய்ப்பளிக்கக் கூடாது. உண்மையினை உரைத்து மக்களின் நலன்கருதி சேவையாற்றக் கூடிய மக்கள் பிரதி நிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். யாரையும் விமர்சிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை அபிவிருத்திக்காக உழைப்பேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் இணைப்பாளராக இருந்த கால கட்டத்தில் பல மில்லியன் ரூபாய்களை அபிவிருத்திக்கு செலவு செய்திருக்கின்றேன். அது எனது தத்துணிவான செயற்பாடாகும். இது மக்களுக்குத் தெரியும். இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடுகின்றேன். என்னை ஆதரித்து பாராளுமன்றம் அனுப்புவீர்கள் என முழு நம்பிக்கை இருக்கின்றது. அவ்வாறு பாராளுமன்றம் சென்ற பிற்பாடு மக்களுக்காக முழு நேர சேவையில் ஈடுபடுவேன். இது உண்மை பொய்கூறி அரசியல் நடத்தும் எண்ணம் எனக்கு இல்லை. மட்டு மாவட்ட தமிழ் மக்கள் முழுமையாக எனது வெற்றிக்கு நேசக்கரம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: