12 Jun 2020

மட்டக்களப்பு மேற்கில் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு ஜீவஊற்று அன்பின்கரம் அமைப்பினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.

SHARE
மட்டக்களப்பு மேற்கில் உயர்தரம் பயிலும்  மாணவர்களுக்கு ஜீவஊற்று அன்பின்கரம்  அமைப்பினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திலிருந்து க.பொ.த சாதாரணதரம் சித்தியடைந்து உயர்தரம் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இராமகிருஸ்ணா மிஷனில் இருந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கும் ஜீவஊற்று அன்பின்கரம் அறக்கட்டளை அமைப்பினால் வெள்ளிக்கிழமை (12)  துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.அனந்தரூபன், கணகாளர், ஜீவஊற்று அன்பின்கரம் அறக்கட்டளை அமைப்பி இணைப்பாளர்களான சிவராசா சிவசீலன், நவரெத்தினம் சங்கரசாயி, திருச்செல்வம் திலிப் மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது 10 மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைக்காக துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கல்வித் திணைக்கள அதிகாரிகள் தமது அமைப்பிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதாக ஜீவஊற்று அன்பின்கரம் அறக்கட்டளை அமைப்பினர் இதன்போது தெரிவித்தனர்.

தொடர்ந்து தமது அமைப்பு மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி நடவடிக்கைக்கான உதவவுள்ளதாகவும் இவ்அமைப்பினர் இதன்போது தெரிவித்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: