19 Jun 2020

சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைகளையும், அபிலாஷைகளையும் வென்றெடுக்கும் பொதுத்தேர்தலாக அமைவதற்கு ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்த வேண்டும் - சிப்லி பாறூக்

SHARE
(விஜயரெத்தினம்)

சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைகளையும், அபிலாஷைகளையும் வென்றெடுக்கும்  பொதுத்தேர்தலாக அமைவதற்கு ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்த வேண்டும் - சிப்லி பாறூக்.
சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைகளையும், அபிலாஷைகளையும் வென்றெடுக்கும்  பொதுத்தேர்தலாக அமைவதற்கு ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடியில் புதன்கிழமை (17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திலே அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...

இம்முறை நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலானது பொதுவாக சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு சவால் மிக்க தேர்தலாக நோக்கப்படுகின்றது. குறிப்பாக பெருபான்மை சமூகத்தை சேர்ந்த எந்தக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், குறிப்பாக ஒருசில இனவாதத்தை தூண்டுகின்ற அரசியல் வாதிகளின் செயற்பாடுகளை பார்க்கும் போது சிறுபான்மை சமூகத்தை ஒட்டுமொத்தமாக ஒரங்கட்டுகின்ற ஒர் தேர்தலாகவே சிறுபான்மை சமூகங்கள் பார்க்கின்றது. இந்த காலகட்டத்தில் சிறுபான்மை சமூகங்கள் தெளிவாக விழிப்படைந்து ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டிய கடற்பாடுள்ளது.

சிறுபான்மை சமூகங்கள் தங்களுக்குள்ளேயே இனவாதக் கருத்துக்கள் மூலமாக வாக்குகளை சேகரிப்பதற்கும்,இந்த இரண்டு சமூகங்களையும் பிளவுபடுத்தி வீணான வதந்திகள் ஊடாக தேவையற்ற உணர்வுகளை தூண்டக்கூடிய இனவாதத்கருத்துக்களை பரப்பியும் வாக்கு சேகரிக்கும் செயற்பாடுகளை உனடியாக தவிர்க்க வேண்டும்.

எதிர்காலத்தில் அமையவிருக்கின்ற (மூன்றில் இரண்டு ஆதரவுடன்)அந்த பாராளுமன்றம் என்பது பெருபான்மை சமூகத்தின் பலத்த ஆதிக்கத்துடன் இருந்தாலும் சிறுபான்மை சமூகத்தின் அரசியல் உரிமைகளையும், அபிலாஷைகளையும், இந்த நாட்டிலே வாழ்வதற்குரிய உரிமைக்கான தேவைகளையும் வென்றெடுப்பதற்கும், இந்த பாராளுமன்ற தேர்தலை மிகவும் சரியாக இரு சமூகங்களும் பயன்படுத்தவேண்டும்.அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் நிதானமாக வாக்களித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலப்படுத்தி கொள்ளவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி உட்பட மாவட்டத்திலே 87400 முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள்.அனைவரும் ஒற்றுமையாக, ஓரணியில் ஒன்றுபட்டு ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரசை  பலப்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும்,வாழ்வதற்குரிய உரிமையையும் வென்றெடுப்பதற்கு நாடாளுமன்ற தேர்தலை பலப்படுத்தி காட்டுங்கள்.

தமிழ்,முஸ்லிம் என்று பிளவுகளையும்,பிரிவினையும் தோற்று விக்காமல் நல்லவர்களுக்கு வாக்களித்து நல்லவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்துக்கு  அனுப்புங்கள். இனவாதத்தின் ஊடாக நாங்கள் எதனையும் சாதிக்க முடியாது.எந்த மதக்கோட்பாடும் சமூகங்களுக்கிடையில் இனவாதம், மதவாதத்தை தூண்டுமாறு வலியுறுத்தவில்லை. சமூகங்களுக்கிடையில் அநீதி இழைக்ககூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சிறப்பாக பயன்படுத்தி சிறுபான்மை சமூகத்தின் அபிலாஷை,அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் தேர்தலாக பயன்படுத்துவோம்.

நாங்கள் எங்களுடைய பலங்களை பலப்படுத்துகின்ற விடயத்தில் ஒட்டுமொத்த தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களித்து எங்களுடைய விடயங்களை சாதிப்பதற்கு நல்லதொரு பலத்தை அமைத்துக் கொடுக்கின்ற தேர்தலாக நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பெரும் தேசியம் பேசுகின்ற அரசியல்வாதிகளுக்கு தீணி போடுகின்ற நாடாளுமன்ற தேர்தல் விடயமாக இத்தேர்தல் மாறிவிடக்கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் தற்போது விழிப்படைந்து தெளிவடைந்திருக்கின்றது எனத்தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: