19 May 2020

களுவாஞ்சிகுடி பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை முன்னெடுப்பு.

SHARE
களுவாஞ்சிகுடி பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை முன்னெடுப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதார பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தில் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுச்சுகாதர பரிசோதகர் கே.இளங்கோவன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பகுதியில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. வீடு வீடாக எமது குழுவினர் சென்று டெங்கு நுடங்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு, டெங்கு நுளப்பு பெருக்கும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதுடன், நுளம்புகள் பெருகும் இடங்களையும், பொருட்களையும் அதற்குரிய சூழலையும் வைத்திருப்பவர்கள் எச்சரிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக பொதுச் சுகாதர பரிசோதகர் இதன்போது தெரிவித்தார்.

எனினும் முற்றாக டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதாயின்  மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும். மக்கள் தமது சூழலை நுளம்புகள் பெருகாத வண்ணம் பேணவேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என பொதுச் சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

இந்நடிவடிக்கையின் போது செட்டிபாளையம் பொதுச்சுகாதர பரிசோதகர் எஸ்.சிவசுதன், மற்றும் பொதுச் சுகாதர வைத்திய அலுவலக உத்தியோகஸ்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது இணைந்திருந்தனர்.

















SHARE

Author: verified_user

0 Comments: