18 May 2020

களுவாஞ்சிகுடியில் அனுஸ்ட்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நாள்.

SHARE
களுவாஞ்சிகுடியில் அனுஸ்ட்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நாள்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை (18) மாலை மிகவும் உணர்வு பூர்வமான முறையில் இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் காரியாலயத்தின் அவ்வமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் நா.நகுலேஸ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் திருமதி.க.ரஞ்சினி, போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைகளின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

ஆண்டுகள் பதினான்றாய் ஆறாத வலிகளுடன், உயிர் நீத்த அனைத்து, உறவுகளை என்றும் நினைவு கூருவோம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையின் முன்னிலையில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கமும் செலுத்தப்பட்டன. 

மேலும் இதன்போது சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் நா.நகுலேஸ், ஆகியோர் இந்நிகழ்வு பற்றி கருத்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



















SHARE

Author: verified_user

0 Comments: