24 Apr 2020

மட்டக்களப்பில் அரச அலுவலகங்களுக்கு வருகை தருபவர்களின் உடல் வெப்பநிலையை அளவிட நடவடிக்கை.

SHARE
மட்டக்களப்பில் அரச அலுவலகங்களுக்கு வருகை தருபவர்களின் உடல் வெப்பநிலையை அளவிட நடவடிக்கை.
அரசாங்கத்தின் அரிவுறுத்தல்களுக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு சமுகமளிக்கும் பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டலில் அலுவலகங்களுக்கு வருகை தருகின்றவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்போது அவர்களின் உடல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகின்றவர்கள் கொரோனா தொற்று அறிகுறிகளிள் ஒன்றான காய்ச்சல் காணப்படலாம் என்ற அடிப்படையில் அலுவலகத்திற்குள் அனுமதிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் பயன்படுத்துவதற்காக வெப்ப அளவீட்டுக் கருவிகள் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் வெள்ளிக்கிழமை(24) மாவட்ட செயலகத்தில் வைத்து அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் பிரதேச செயலாளர்களும் பிரசன்னமாயிருந்தனர்.

மேலும் கொரோனா தொற்று பரவாமலிருக்க சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றம் அரசினால் வழங்கப்படும் அறிவறுத்தல்களையும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அதைன மேற்பார்வை செய்கின்ற பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்குரியது எனவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

மாவட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களின் நிவாரணப்பணிகள் மற்றும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கள் தொடர்பான முன்னேற்றங்களும் ஆராயப்பட்டதுடன், விரைவாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய விடயங்கள் பற்றியும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தப்பட்டது.





SHARE

Author: verified_user

0 Comments: