3 Apr 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய அதிகாரி.எம் அச்சுதன் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதன்போது தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வேலைகளுக்காக சென்று திரும்பிய 1011 பேர்களும், அத்தோடு மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைகள் நிமிர்த்தமாகவும், கல்வி நடவடிக்கைகளுக்காகவும் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வந்தவர்களுமாக 1351 பேர்களுமாக, மொத்தம் 2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவு அவர்களுக்கு ஏதாவது அசாதாரனமான உடல் நிலைகானப்பட்டால் உடனடியாக தொடர் மருத்துவ நடவடிக்கை எடுப்பதற்கு போதனா வைத்தியசாலை தயாரகவுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: