23 Mar 2020

களுவாஞ்சிகுடி பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கொள்வனவில் மக்கள் முண்டியடிப்பு, பொலிசார் கடமையில்.

SHARE
(ஜதுர்சயன்) 

களுவாஞ்சிகுடி பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கொள்வனவில் மக்கள் முண்டியடிப்பு, பொலிசார் கடமையில்.
இலங்கை உள்ளிட்ட சர்வதேசத்தையே ஆக்கிரமிப்புச் செய்துள்ள கொவிட் - 19 என்கின்ற புதியவகை கொரோனே வைரஸ் நோயினால் சர்வதேச ரீதியில் பல உயிரிழப்புக்களையும், பாதிப்புகளையும், ஏற்படுத்தி வருகின்ற இந்நிலையில் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இதன் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் முகமாக கடந்த 3 தினங்களாக இலங்கை நாடே பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின்கீழ் அமைதியாய் காணப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களும், நாடு பூராகவும், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்தது.

இதனால் அன்றாட நாட் கூலி வேலை செய்து தமது வருமானத்தை ஈட்டு குடும்பத்தைப் பாதுகாத்துவரும் மக்கள் பெரிதும் இன்னலுற்றனர். அரச ஊழியர்களுக்கு மாதாந்த வேதனம் கிடைக்கின்ற இந்நலையில் நாட் கூலிகளால தொழில் செய்து தமது வருமானத்தை ஈட்டிவந்த மக்கள் கடந்த  3 தினங்களாக அவஸ்த்தைப் பட்டனர்.

இது ஒரு புறமிருக்க மரக்கறி உள்ளிட்ட பொருட்கள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், உள்ளிட்டவற்றைக் கொள்வனவு செய்வதிலும் மிகுந்த சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர். 

இந்நிலையில் திங்கட்கிழமை (23) காலை 6 மணிக்கு அமுலிலிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்கள் கொள்வனவு செய்வதிலும், வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

மட்டக்களப்பு மவாட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதான நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தைப் பகுதி திங்கட் கிழமை 6 மணிக்கு திறந்ததையடுத்து மக்கள் வெள்ளம்போல் திரண்டு தமது அன்றாட பொருட்களைக் கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது. களுவாஞ்சிகுடி பொலிசார் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டுவருவதோடு, முகக் கவசம் அணியாத எவரையும் பொதுச் சந்தைககுள் உள்நுளைய அனுமதிக்கப்படவில்லை. 

இந்நிலையில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின் மட்டக்களப்பபு மாவட்டத்திலிருந்து இயங்கிவரும் ஜி.கே. அறக்கட்டளை அமைப்பினால்  திங்கட்கிழமை காலை களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதிக்கு முகக் கவசம் அணியாமல் வந்த மக்களுக்கு முகக் கவசம், கையுறைகள், மற்றும், கொரோனா வைரஸ் பரவாமலிருக்கும் வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரம் என்பன இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

இவற்றினைவிட களுவாஞ்சிகுடியில் அமைந்துள் வங்கிகளிலும், பாமஸி, மற்றும் பிரான மொத்த விற்பனை விலையங்களிலும், பொதுமக்களுக்கு இலகுவாக கைகளுவும் வசதிகள் வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றைக் கண்காணிக்க பொலிசார் சேவையிலீடுபடுத்தப் பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

எது எவ்வாவு அமைந்தாலும் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகமாகக் காணப்பட்டன அந்தவகையில் இஞ்சி ஒரு கிலோ 600 ரூபா, உப்பு ஒரு பை 70 ரூபா,  சீனி ஒரு கிலோ 115 ரூபா, தக்காளி ஒருகிலோ 100 ரூபா, போஞ்சி ஒரு கிலோ 120 ரூபா, பாகை ஒரு கிலோ 150 ரூபா, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபா, பச்சை மிளகாய் ஒரு கிலோ 200 ரூபா, வெள்ளைப் பூடு ஒரு கிலோ 480 ரூபா, கொறுக்காய் ஒரு கிலோ 600 ரூபா, தக்காளி ஒரு கிலோ 120 ரூபா, சிறிய தேங்கள் ஒன்று 100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகளவு சனநடமாட்டம் இருப்பதனால் 12 மணியுடன் கடைகளை மூடுமாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளனர். எனினும் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்பில் பொதுச் சந்தைப் பகுதியில் பொலிசார் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவதோடு, முகக் கவசம், அணிதல், கைகளுவுதல் தொடர்பிலும் ஒலிபெருக்கி மூலம் எடுத்தியம்பி வருகின்றனர்.
















SHARE

Author: verified_user

0 Comments: