4 Feb 2020

கடந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வழிப்புணர்வு.

SHARE
கடந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வழிப்புணர்வு.
கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதாதரா விழிப்புணர்வு நிகழ்வு திங்கட்கிழமை (03)  மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் நடைபெற்றது.

கடந்த டிசம்பர் மாதம் சித்தாண்டிப் பகுதி வெள்ளத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.  

சித்தாண்டி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் நான்கு இடங்களில் செங்கலடி பொது சுகாதார வைத்திய அதிகாரியின் ஒத்துழைப்புடன், அப்பகுதி பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்களைக் கொண்டு மக்களுக்கு வழிப்புணர்வுகள் இடம்பெற்றன.

இதன்போது அடிப்படைச் சுகாதார மேம்பாடு, உணவு பழக்கவழக்கங்கள், சிறுவர்கள், குழந்தைகள் நலன்பேணல், வெள்ள அனர்த்த காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் இதன்போது பொது சுகாதார பரிசோதகர்களால் எடுத்தியம்பப்பட்டன. 

இவ்விழிப்புணவின் பின்னர் மக்களுக்கு சுகாதாரப் பொதிகளும். இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினரால் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
















SHARE

Author: verified_user

0 Comments: