மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வு.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பேன்ட் வாத்திய அணி வகுப்பும் முப்படைகளின் அணி நடைகளும் நடை பெற்று இலங்கையின் தேசிய கொடி ஏற்றப்பட்டு இரு மொழிகளிலும் தேசீயகீதம் இசைத்து ஆரம்பிக்கப்பட்டு நான்கு மதங்களை பிரதிபலிக்கின்ற மதகுருமாரின் ஆசி வழங்குதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் விமானப் படையின் இணைப்பதிகாரி ஆர்.எம்.என்.எல் ரத்நாயகவும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மேலதிக அரசாங்க அதிபர் நவரூப ரஞ்சினி முகுந்தன், மற்றும் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதம கணக்காளர் க.ஜகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகல் புண்ணிய மூர்த்தி, கணக்காளர் பிரேம்குமார், ஆகிய உயர் அதிகாரிகளும், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோத்தர்கள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந் நிகழ்வின் போது அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் ஒற்றுமையான செழிப்பு மிகுந்த நாட்டினை கட்டியெழுப்புவோம் எனும் கருப் பொருளிலே இச்சுதந்திர தினம் அமையப்பெற்றுள்ளது. சமாதானம் என்பது தனி நாட்டுக்கு மாத்திரம் அல்ல ஒவ்வொரு தனி மனிதனும் சுதந்நிரமாக வாழ்வதுடன் ஏனைய சமூகப் பிரசைகளையும் சுதந்நிரமாக வாழ்வதற்கு வழி சமைத்துக் கொடுக்க வேண்டும். அதனோடு செழிப்பாக நாடு எனும் தொனிப் பொருள் நாட்டை இயற்கை மரங்களினால் செழிப்படைய செய்து மக்களின் வாழ்க்கையின் ஆரோக்கியத்தை ஏற்படுத்தி இந் நாட்டு மக்கள் அனைவரும் சுபீடசமும் சுகவாழ்வுடனும் வாழ்வதற்கு அனைவரும் இவ்விடத்தில் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
0 Comments:
Post a Comment