1 Jan 2020

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களில் இருவர் பிணையில் விடுதலை.

SHARE
ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களில் இருவர் பிணையில் விடுதலை.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வந்த தேசிய தௌஹீக் ஜமாஅத் இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் இருவர் செவ்வாய்க்கிழமை 31.12.2019 மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வானின் உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் அமைந்திருந்த தேசிய தௌஹீக் ஜமாஅத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் 4 பெண்கள் உட்பட காத்தான்குடியைச் சேர்ந்த 63 பேர் கைதாகி தொடர்ந்து நீடிக்கப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.

இவர்களில் இருவரே தலா 2 இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து சந்தேக நபர்கள் கிடைக்கப்பெற்ற அறிக்கைக்கு அமைய இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய 61 பேரின் விளக்கமறியல் ஜனவரி 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் சைக்கிள் வியாபாரம் செய்பவர்கள் என்றும் அது தொடர்பான விடயத்திலேயே கைது செய்யப்பட்டனர் என்றும் தெரியவருகின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: