புத்தாண்டு உதயமாகிய சற்று நேரத்தில் இடம்பெற்ற குழு மோதலொன்போது ஒருவர் -படுகாயம் செங்கலடியில் சம்பவம்.2020 புத்தாண்டு உதயமாகிய சற்று நேரத்தில் இடம்பெற்ற குழு மோதலொன்போது ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் செங்கலடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இந்த குழு மோதல் சம்பவத்தில் இருவேறு அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளரான ஒருவர் மதுபோதையில் வந்து தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்குச் சொந்தமான செங்கலடி எல்லை வீதியிலுள்ள கட்டிடத்தில் இயங்கி வந்த சிகை அலங்கார நிலையத்தின்மீது தாக்கிதையடுத்து கைகலப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மதுபோதையுடன் வந்த நபர் சிகை அலங்கார நிலையத்தின் கண்ணாடிகளை கைகளினால் உடைத்ததினால் அந்த நபரின் உடலில் கண்ணாடி வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்று சற்று நேரத்தில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு வந்து திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
முரண்பட்டுக் கொண்ட குழுவினர் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்குச் சொந்தமான செங்கலடி எல்லை வீதியிலுள்ள கட்டிடத்தில் இயங்கி வந்த கண்ணாடிகளை அடித்து நொருக்கியதோடு அருகிலிருந்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தி விட்டு இலத்திரனியல் கருவியொன்றையும் திருடியுள்ளதாக தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே.மோகன் இதுகுறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment