31 Dec 2019

உலகஉணவு பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் துறைசார் திணைக்கள அதிகாரிகளுக்கு கருத்தரங்கு.

SHARE
உலகஉணவு பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் துறைசார் திணைக்கள அதிகாரிகளுக்கு கருத்தரங்கு.
உலக உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையிலும் உணவு பாதுகாப்பு செயல்திட்டத்தினை 2012 ஆம்  ஆண்டு இலங்கையிலும் அறிமுகப்படுத்தியிருந்தனர்.

துரதிஸ்டவசமாக யுத்த காரணத்தினால் வட கிழக்கு பிரதேசங்களில் நடைமுறைக்கு கொண்டு வருவதில் சில சிரமங்கள் காணப்பட்டமையால் முன்னெடுக்க முடியவில்லை. இதனை தற்N;பாது வடகிழக்கு மாகாணங்களில் உலகஉணவு பாதுகாப்பு செயற்திட்டத்தினை தற்போது முன்னெடுப்பதற்கு ஏதுவான காரணிகளை, கருத்துக்களை துறைசார் திணைக்கள அதிகாரிகள் மூலமாக அறிந்து கொள்ளும் வகையான கருத்தரங்கு திங்கட்கிழமை (30) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

உணவு பாதுகாப்பு விவசாய மீன்பிடி மற்றும் அதற்கு மேலதிகமான உணவுகள் தொடர்பான நிலைபேரான உணவு பாதுகாப்பு அளவீட்டு செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இவ்விசேட கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் புண்ணியமூர்த்தி சசிகலா, தேசிய நிதி பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் கே.மகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டனர்.

உலக உணவு பாதுகாப்பு செயல்திட்ட இணைப்பாளர் நியுமத் மற்றும் இச் செயற்த்திட்டத்தினை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருகின்ற பேராதனிய பல்கலைகழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரஞ்சித் பிரேமலால் டி சில்வாவின் குழுவினரும் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கி கலந்து கொண்ட அதிகாரிகள் உத்தியோகத்தர்களிடம் இருந்து கருத்துக்களை கேட்டறிந்து அக்கருத்துக்களை நிலைபேறான இலக்குகளை அடைந்து தேசியமட்டத்தின் நடைமுறைப்படுத்துவதற்கு இச் செயல்திட்டம் உதவுவதாக திருமதி தமேய்ரா இதன்போது தெரிவித்தார். 






 
SHARE

Author: verified_user

0 Comments: