15 Dec 2019

கடந்த அரசாங்கம் விட்ட பிழை காரணமாக பட்டதாரிகளின் வாழ்க்கை நிலை தர்போது கேள்விக் குரியாகியுள்ளது – கருனா அம்மான்.

SHARE
கடந்த அரசாங்கம் விட்ட பிழை காரணமாக பட்டதாரிகளின் வாழ்க்கை நிலை தர்போது கேள்விக் குரியாகியுள்ளது – கருனா அம்மான். 
கடந்த அரசாங்கம் விட்ட பிழை காரணமாக இவர்களின் வாழ்க்கை நிலை தற்போது பட்டதாரிகளின் நிலமை கேள்விக் குரியாகியுள்ளது பொது நிர்வாக சேவை அமைச்சின் ஊடாக விரைவில் நியமனம் வழங்கப்படும். என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமுரத்தி முரளிதரன் ( கருhணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஞாயிற்றுக்கிழமை (15) பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.அணிலன் தலைமையில்  மட்டக்களப்பு காந்திப் பூங்காவில்  சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னனயின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கலந்துகொண்டு வெலையற்ற பட்டதாரிகளின் இப்பேதைய நிலைமை தொடர்பில் கேட்டுயறிந்து கொண்டதுடார்.

இதன்போது அவர் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்…

மட்டக்களக்கு மாவட்டத்தில் மொத்தமாக 3200 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச ஆகியோர் இலங்கை பூராகவுள்ள 54000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கு வதாக வாக்குதியளித்தனர். 20 பட்டதாரிகளுக்கு வயதெல்லை கடந்துள்ளது. ஆனால் அவர்களையும் உள்வாங்கி இந்த அரசாங்கம் தை மாததிற்குள் நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.அணிலன் கருத்து தெரிவிக்கையில் …

கடந்த அரசாங்கமானது வேலையற்ற பட்டதாரிகளை உள்வாரி வெளிவாரி எனப் பிரித்து எம்மை ஓரங்கட்டியது. இலங்கையின் தர்போதைய பிரதமர் ஜனாதிபதியாக இருந்த சமயம் அக்காலத்தில் இருந்த 57000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதவித வேறுபாடுகளும் காட்டாது உடன் நியமனம் வழங்கினார். ஆதைத்தான் நாமும் இப்போது எதிர்பார்க்கிரோம். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோட்டாபாய ராஜபக்ச அவர்கள் தான் ஆட்சிக்கு வந்தால் தை மாதத்திற்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக வாக்குதியளித்தார். அதை அவர் நிறைவேறுவார் என நம்புகிறோம். கடந்த அரசு வேலையற்ற பட்டதாரிகளை புறந்தள்ளியது போன்று இல்லாமல் இந்த அரசு வேலையற்ற பட்டதாரிகளுக்கான நிரந்தர தீர்வை வழங்கவேண்டுமென தெரிவித்தார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: