28 Dec 2019

கடந்த அரசாங்கத்தில் 6 ஆயிரம் பேருக்கு அரசியல் தேவைக்காக போலியான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன புதிய ஜனாதிபதியின் ஆட்சி 10 வருடத்திக்கு மேல் நீடிக்கவுள்ளது - முன்னாள் பிரதியமைச்சர் வி. முரளிதரன்.

SHARE
கடந்த அரசாங்கத்தில் 6 ஆயிரம் பேருக்கு அரசியல் தேவைக்காக போலியான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன புதிய ஜனாதிபதியின் ஆட்சி 10 வருடத்திக்கு மேல் நீடிக்கவுள்ளது - முன்னாள் பிரதியமைச்சர் வி. முரளிதரன்.
கடந்த அரசாங்கத்தில் 6 ஆயிரம் பேருக்கு அரசியல் தேவைக்காக போலியான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன புதிய ஜனாதிபதியின் ஆட்சி 10 வருடத்திக்கு மேல் நீடிக்கவுள்ளது என முன்னாள் பிரதியமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (27) மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

 அபிவிருத்தி பணிகள் வேலைவாய்ப்புகள் வரும் பாரளுமன்ற தேர்தலுக்கு பின்புதான் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த அரசாங்கத்தின் பிரதமர் ரணில் அவர்களால் 1300 பேருக்கு இரண்டாம் மொழி ஆசிரியரானுக்கான நியமனம் அத்துடன் 6 ஆயிரம் பேருக்கு அரசியல் தேவைக்காக போலியான நியமனங்கள் எந்தவித அமைச்சரவையினதும், மற்றும், நிதியமைச்சின் அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் ஏமாரப்பட்டுள்ளார்கள் அவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனையும் எமது புதிய அரசாங்கத்தின் பிரதமர் அவர்களே சரி செய்ய வேண்டியுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் இனியாவது நன்றியுடைவர்களாகயிருக்க வேண்டும். கடந்த 5 வருட ஆட்சியில் தமிழ் மக்களுக்கு ஏதுவும் கிடைக்கவேயில்லை. சஜித் வென்றிருந்தாhல் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்போம். முன்னாள் ஜனாதிபதியை தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான் கொண்டு வந்தனார். கிழக்கு மாகாணசபையை நாசமாக்கி விட்டனர். புதிய ஜனாதிபதியின் ஆட்சி 10  வருடத்திக்கு மேல் நீடிக்கவுள்ளது. அதனை நாம் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: