19 Nov 2019

கட்டுரை : தமிழினத்தின் விடிவிக்காய் களமாடியவர்களின் குடும்பங்களின் அவலநிலையை துடைக்க யார் முன்வருவார்?

SHARE
கட்டுரை : தமிழினத்தின் விடிவிக்காய் களமாடியவர்களின் குடும்பங்களின் அவலநிலையை துடைக்க யார் முன்வருவார்?

(சக்தி) 

தமிழர்களின் பரம்பரையை ஆதிகாலத்திலிருந்து எடுத்து நோக்கினால் புராண, இதிகாசங்களிலிருந்து வரும் கதா பாத்திரங்களிலிருந்தும், நமது தற்போதைய தலைமுறையினருக்கு தெரியவருவதாவது அன்றிலிருந்தே போராட்டங்கள் நடந்தேறித்தான் வந்திருக்கின்றன. கல், மரம், ஈட்டி போன்றன அப்போதைய ஆதிகாலத்தில் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் நாம் புராணக் கதைகளிலிருந்து அறிய முடிகின்றது. 

அவ்வாறு இருந்த வந்த அடிச் சுவடுகள்தானோ தெரியாது இலங்கையின் வடக்கு கிழக்கிலும் இரும்புத் துப்பாக்கிகள், பீரேங்கிக் குண்டுகள், வரைக்கும் சென்று போராட்டங்கள் நடைபெறுவதற்கு அத்திவாரம் இட்டிருக்கலாம் என எண்ணத் தோணுகின்றது. 

புராண இதிகாசக்கதைகளில் வரும் கதா பாத்திரங்களை தமிழ் மக்கள் தற்போது புத்தகங்களிலும் அரிச்சுவடிகளிலும்தான் படித்தறியக்கூடியதாகவுள்ளது. ஆனால் கடந்த 3 தசாப்தகாலமாக வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் போராட்டக் களத்தில் துவண்டு மணிந்தவர்கள். யுத்தகளத்தில் மண்மீட்புக்காகவும், விடுதலைக்காகவும் பரப்பரையிலிருந்தே போராடிவந்த தமிழினம் கொள்கைகளுக்காக மடிந்தவர்கள் போக அவர்களின் உறவுகள் சொல்லொணாத் துயரங்களை தாங்கிக்கொண்டுதான் இந்த மண்ணில் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  என்பதை இவ்வுலகிற்கு எடுத்தியம்பவேண்டியுள்ளது. அவ்வாறான ஒரு குடும்பத்தின் கதையே இது….

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியில் அமைந்துள்ள கிராமமே விநாயகபுரம் எனும் தமிழ் கிராமமாகும். கடந்த யுத்த காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட அக்கிராமத்தில் ஆறுமுகம் கமலா குடும்பமும் விதிவிலக்கல்ல. மலையக வம்சாவழியைச் சேர்ந்த அவர்கள் 1983 ஆம் அண்டு காலப்பகுதியில் மலையகத்தில் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக இடம்பெயர்ந்து கிழக்கிற்கு வந்த இவர்கள் பல்வேறுபட்ட இடங்களில் பல தடவைகள் இடம்யெர்ந்து, இடம்பெயர்ந்து தற்போது விநாயகபுரம் நான்காம் பிரிவில் வசிக்கின்றார்கள். 

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் மலையகத்தில் பிரச்சனை என்று இகிழக்கிற்கு இடம்பெயர்ந்த அவர்களுக்கு இகிழக்கில் காத்திருந்தது பேரிடி என்பதை அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. கடந்த யுத்த சூழலில் அகப்பட்டு மிகவும் கஸ்ற்றப்பட்டு ததது பிள்ளைகளை வளர்த்தெடுத்த அந்தக் குடும்பத்தினருக்கு சொத்தாக இருந்த 2 ஆண்பிள்ளைகளும் காலத்தின் சூழலால் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இணைந்து கொண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். அவர்களில் மூத்த ஆண்மகன் குணேஸ்வரனின் புகைப்படம்கூட இல்லாமல், இரண்டாவது மகன் தயாளன் புகைப்படத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு, அண்மையில் குடும்பத்தின் ஆணிவேராக இருந்த குடும்பத்தலைவனையும் இழந்த நிலையில் ஆதரவற்ற நிலையில் தவியாய்தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


எமக்கு எந்தவித உதவிகளுமில்லை, சரியான கஸ்ட்டத்தில்ததான் வாழ்ந்து வருகின்றோம். எனது இரண்டு ஆண்மக்களும் தமிழீழ விடுதலைப் போரட்டத்தில் ஈடுபட்டு வீரச்சாவடைந்துள்ளார்கள். நான் சுயகயீனமாக இருக்கின்றேன், எனது மூத்த மகளும் இதுவரையில் திருமணம் செய்யாமல் அவரும் சுகயீனமாக இருக்கின்றனார். எனது கடைசி மகள் திருமணம் செய்துள்ளார். அவருக்கு 2 பிள்ளைகள் உள்ளார்கள் இளைய மகளின் கணவர் அதாவது எனது  மருமகன்தான் எங்கள் அனைவரையும் பார்த்து வருகின்றானர். எனது கணவரும் அண்மையில்தான் இறந்தார். நாங்கள் வாழ்வாதாரத்திற்காக நடாத்தி வந்த சிறிய பெட்டிக்கடையையும் முன்கொண்டு செல்ல வசதியில்லாமல் தற்போது மூடிக்கிடக்கின்றது. என கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றார் தனது 2 ஆண் மக்களையும் போராட்டத்திற்காகக் கொடுத்துவிட்டு இன்றுவரை ஆண் மக்களின் உதவியின்றி வறுமையில் அல்லவுலுறும் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த 77 வயதுடைய ஆறுமுகம் கமலா.
கடந்த யுத்த காலத்தில் கமலம்மாவைப் போன்று பல தாய்மார்கள் தமது பிள்ளைகளைப் பறிகொடுத்த நிலையில் நிர்க்கதியாகியுள்ளார்கள் அவர்களது வாழ்வாதாரத்திற்கு புலம் பெயர்ந்து வாழும் மக்கள் கருணை காட்டவேண்டும், அதுபோல் இலங்கையிலுள்ள தனவந்தர்களும், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களும் இவ்வாறானவர்களின் துயர் தடைக்க முன்வரவேண்டும்.

நான் ஜெயந்தி நான் விநாயகபுரம் நான்காம் பிரிவில் வசிக்கின்றேன் நாங்கள் 4 பெண்களும், 2 ஆண்களுமாக நாங்கள் 6 பிள்ளைகள். எமது குடும்பத்திற்கு உழைத்துத் தரவேண்டிய எனது சகோரர்களும் போராட்டத்திற்குப்போய் இறந்துவிட்டார்கள். நானும் எனது அம்மாவும் வயல்களுக்குச் சென்று கதிர் பொறுக்கித்தான் எங்களை எனது அம்மா எங்கைள வளர்த்தா. நாங்கள் அண்ணா என்று கூப்பிடுவதற்குக்கூட எங்களுக்கு யாருமில்லை அப்பாவின் இறுதிக்கிரியைக்கு கடமைகளை நிறைவேற்ற எமக்கு ஒரு ஆண்மகன் இல்லாமல் போய்விட்டது. எனது கணவர்தான் 150000 ரூபா கடன்பட்டு எனது அப்பாவின் இறுதிக் கிரியையை நிறைவேற்றினோம். எனது அண்ணாக்கள் இருவரும் இருந்திருந்தால் நாங்கள் நன்றாக வாழ்ந்திருப்போம். 

எனது மூத்த அக்கா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மாதாந்தம் சிகிச்சை பெறுவற்குக்கூட வசதியில்லாமல் உள்ளது. எனது அண்ணாக்கள் இருந்திருந்தால் எங்களை இவ்வாறு விட்டிருக்கமாட்டார்கள். எனது அம்மா நெல் குற்றிவிற்று, கதிர் பொறுக்கித்தான் எங்களை வளர்த்தார். பாடசாலைக்குப் போட்டுச் செல்வதற்கு சப்பாத்து இல்லாமல்தான் நான் 8 ஆம் ஆண்டு வரைப் படித்துவிட்டு மேற்கொண்டு படிக்க வசதியில்லாமல்  இடைநடுவில் விட்டேன். அம்மா நெல்குற்றிஎடுக்க அதனை நான் தலையில் சுமந்து கொண்டு விற்றுவருவேன் அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் எமது குடும்பத்தின் சீவியம் போனது. எனது அப்பாவிற்கும் கண்தெரியாது அவர் இறந்து 2 மாதங்களாகின்றன. 

எனது கணவர்தான் எனது அம்மா, அக்கா மற்றும் எனது குடும்பத்தையும் பார்த்து வருகின்றார். எனவே என்னக்காகவேண்டி எனது அக்காவிற்கும், அம்மாவிற்குமாவது ஏதாவது ஒரு வாழ்வாதார உதவி செய்யுதரவும். தாதாந்தம் இவர்கள் இருவரையும் சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லவேண்டும் அனைத்தையும் நான்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். எமது வளவினுன் ஒரு சிறிய பெட்டிக்கடை வைப்பதற்குரிய வசதிகள் உள்ளன. அதனையாவது மேற்கொள்ள யாராவது முன்வாருங்கள். 

எனவே தனவந்தர்கள், பரோபகாரர்கள், தான்னார்வ தொண்டர் அமைப்புக்ள் அராசங்க அதிகாரிகளிடம் இருகரம் கூப்பி கேட்டுக் கொள்வது யாருமற்ற நிலையில் ஆதரவற்று நோய்வாய்ப்பட்டிருக்கும் எனது அம்மாவிற்கும் அக்காவிற்குமாக சேர்த்து ஒரு வாழ்வாதார உதவியினை மேற்கொண்டு தாருங்கள். நானும் பலரிடமும் உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சி செய்து பார்த்தேன் எதுவும் கைக்கெட்டவில்லை. வறுமையின் விழிப்பில்தான் நாங்கள் நின்றுகொண்டிருக்கின்றோம் எனது கணவர் கூலிவேலை செய்து உழகை;கும் உழைப்பில் எங்கள் அனைவரையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அது இயலாமலுள்ளது. என கண்களில் நீர் ததும்பத் ததும்ப தனது மன ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். விநாயகபுரம் 4 ஆம் பிரிவைச் சேர்ந்த  தனது 2 மூத்த ஆண் உடன் பிறந்த சகோதரர்களை போராட்டத்தில் பறிகொடுத்த வேந்தன் ஜெயந்தினி என்பவர். 

நாங்கள் கடந்த காலத்தில் எமது மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் ஆயுதம் ஏந்திப்போராடினோம். தற்போது நங்கள் புணர்வாழ்வழிக்கப்பட்டு ஜனநாயக ரீதியில் ஒரு அரசியல் கட்சியாக வடக்கு கிழக்கில் செயற்பட்டு வருகின்றோம். இந்நிலையில் அரசியல் செயற்பாடுகள் செய்துகொண்டிருக்ககும் நிலையிலுமம் முன்னாள் போராளிகளின் குடும்பங்களையும் கவனித்து வருகின்றோம். சிலருக்கு சிறிய அளவிலான வாழ்வாதார உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றோம், ஆனால் எம்மால் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் போதாது. மேலும் இவ்வாறான குடும்பங்களுக்கு மேலும் உதவிகள் செய்யவேண்டியுள்ளது. எதிர்காலத்தில் மேலும் உதவிகளைச் செய்ய முயற்சி செய்து வருகின்றோம் எம்முடன் இணைந்தோ அல்லது தனித்தனியாகவே முன்வந்து இவ்வாறான குடும்பங்களுகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய அனைவரும் முன்வரவேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மற்றும் அப்பாறை மாவட்டங்களுக்குரிய பொறுப்பாளர் நா.நகுலேஸ் தெரிவித்தார்.

இனியொரு யுத்தம் வேண்டாம் என நினைத்துக் கொண்டு வடுக்களைச் சுமந்த நிலையில் வாழும் தமிழினத்தின் மத்தியில், நகுலேஸின் கருத்துக்கள்  ஆதரவற்ற இவ்வாறான மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தலும். அவரவர் சொந்தக்காலில் நின்று சிறியளவிலேனும் வருமானத்தைப் பெற்று வாழ்வைக் கொண்டு நடத்த இனைவரும் முன்வரவேண்டும். என்தையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: