திருகோணமலைப் பெண் மட்டக்களப்பு பனிச்சங்கேணி வாவியிலிருந்துசடலம் மீட்பு-
திருகோணமலைஉவர்மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலத்தை மட்டக்களப்பு வாகரைப்பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணிப் பாலத்தை அண்டிய வாவிப் பகுதியிலிருந்து திங்கட்கிழமை18.11.2019 மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டசடலம் திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை யோகாம்பிகை (வயது 64) எனஅடையாளம் காணப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கி ழமைஇப்பெண் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள தனது மகளின் வீட்டிலிருந்து வெளியேறிதேவாலயம் செல்லப்போவதாகக் கூறி வெளியேறியுள்ளார்.பின்னர்அவர் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் செல்லும் பஸ்ஸில் ஏறி திருகோணமலைக்குபயணச் சீட்டுப் பெற்றிருந்த நிலையில் இடைவழியில் பனிச்சங்கேணி வாவிப் பாலத்தடியில்இறங்கியுள்ளார்.அங் குஇறங்கிய அந்தப் பெண் காணாமல் போயிருந்த நிலையில் திங்கட்கிழமை சடலமாகமீட்கப்பட்டுள்ளார்.
பனிச் சங்கேணிப்பாலத்தை அண்டிய வாவி மருங்கிலுள்ள உல்லாச விடுதியொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீசீரீவிகாணொளிக் கமெராவில் அந்தப் பெண் வாவியில் குதிப்பதான காட்சி பதிவாகியிருந்ததாக பிரதேசசடுதி மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்தார்.மீட்கப்பட்டசடலத் தை அப்பெண்ணின் சகோதரரான கணபதிப்பிள்ளை பாக்கியராசா திருகோணமலையிலிருந்து வந்துஅடையாளம் காட்டினார்.இச்சம்பவம்பற்றிவா கரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment