10 Oct 2019

மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சை 7 ஆம் கட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கட்டிடம் காட்டுயானைகளின் தாக்குதலால் சேதம்.

SHARE
மட்டக்களப்பு  மாவட்டம் உன்னிச்சை   7 ஆம் கட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கட்டிடம் காட்டுயானைகளின்  தாக்குதலால் சேதம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின்  வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை  கிராமத்திலுள்ள மாரியம்மன் ஆலயத்தின் மடப்பள்ளியினை புதன்கிழமை (09) இரவு காட்டுயானைகள்  உடைத்து அங்கிருந்த சில பொருட்களையும்  சேதப்படுத்திச் சென்றுள்ளது.

அப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யானை தடுப்பு மின்சார வேலியினைத் தாண்டி வந்த காட்டுயானைகள் உன்னிச்சை 7 ஆம் கட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவு ஒன்றினையும், மடப்பள்ளியையும் உடைத்து ஆலய பொருட்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

உன்னிச்சை கிராமத்தின் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்தவண்ணம் உள்ளதாக இக் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் எம்மிடம் தெரிவித்தனர். 

மேற்படி ஆலயத்தின் சேதத்தினை ஆயித்தியமலை பொலிஸாரும், கிராம உத்தியோகத்தரும்,  பார்வையிட்டுச் சென்றுள்ளதாகவும் ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: