கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்ட நிகழ்வு பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ  இன்று(15) நடைபெற்றது.
வசந்த மண்டபத்தில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்றது. பிள்ளையார் தேர் மற்றும் சித்திரத்தேர் போன்றவற்றில் பூசைகள் நடைபெற்றதனை தொடர்ந்து ஆண் அடியார்கள் வடம் பிடித்து இழுக்க மரச்சிற்கள் மண்ணில் புதைந்தோடி பக்தர்களின் அரோகரா கோசங்களுடன்  இரு தேர்களும் ஆலயத்தைச் சுற்றி வலம் வந்தன.













.jpeg) 
 
 
.jpeg) 
0 Comments:
Post a Comment