26 Sept 2019

உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியக தீபம் திலீபனின் 32 வது நினைவு வணக்க நிகழ்வு.

SHARE
உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியக தீபம் திலீபனின் 32 வது நினைவு வணக்க நிகழ்வு.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உண்ணாவிரதமிருந்த உயிர் நீத்த தியக தீபம் திலீபனின் 32 வது  நினைவு வணக்க நிகழ்வு மட்டக்களப்பு மண்டூர் - கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக் கழக மைதானத்தில் புதன்கிழமை(25) மாலை கொட்டும் மழைக்கு மத்தியில் நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயகப் போராளிகள் கட்சியியும், இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை அமைச்சர் கி.துரைராசிங்கம். முன்னாள கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன், ஜனநாயகப் போராளிகள் கட்சியன் மட்டு அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் ந.நகுலேஸ், மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கொட்டும் மழைக்கு மத்தியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ப.கோணேஸ்பரன் (சாந்தன்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், ஆகியோர் இணைந்து திலீபனின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தனர். புpன்னர் பொதுச் சுடரினை ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் ந.நகுலேஸ், ஏற்றிவைத்தார். பின்னர் கலந்து கொண்ட பிரதிநிதிகளால் ஈகைச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டு, மலரஞ்சலியும் இடம்பெற்றதோடு, நினைவுரைகளும் இடம்பெற்றன.


































SHARE

Author: verified_user

0 Comments: