10 Aug 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் பாவனையாளர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழுவினால் முன்னெடுப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் பாவனையாளர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழுவினால் முன்னெடுப்பு.
இலங்கை மின்சார சபையினால் மின் பாவனையாளர்களை பாதுகாக்கும் வேலைதிட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் சமுக விழிப்புணர்வு வேலை திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்திலுள்ள மின் இணைப்பாளர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி நெறி வெள்ளிக்கிழமை(09) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் ஏ.ஜெயசுரியன் தலைமையில் இடம்பெற்றது. இதில் மாவட்டத்தின் 500க்கும் மேற்பட்ட இலத்திரனியல் இணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழுவின் மின் உதவிப் பணிப்பாளர் (பொறியியலாளர்) எஸ்.கிரிசானன் அவர்களால் கலந்து கொண்டவர்களுக்கு மின் பாவனையாளர்களை பாதுகாத்தல் எனும் தலைப்பின் கீழ் விரிவுரைகள் இங்கு வழங்கிவைக்கப்பட்டன. இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்… இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பொதுமக்கள் 180 பேர் மின்சாரம் தாக்கி இறந்தனர். 2018 ஆம் ஆண்டு அது 89 மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மிகக் குறைந்த வீதத்தில் மரணங்கள் பதிவாகியுள்ளதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவர் மாத்திரமே கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.

2020 ஆம் ஆண்டு இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழுவினால்  மின் இணைப்பாளர்களுக்கான உரிமம் (லைசன்) வழங்கப்படவுள்ளதோடு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களும் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளன. பொதுமக்களை மின்சார தாக்கத்திலிருந்து  பாதுகாக்கும் பொருட்டு மின் இடர் ஆளியை சகல வீடுகளிலும் பொருத்தி மாதத்திற்கு ஒரு தடைவை பரீட்சித்தல் மற்றும் சட்ட விரோத இணைப்புக்களை தவிர்த்தல் முறையான பராமரிப்பு பாதுகாப்பான இணைப்பு தரமற்ற பொருட்பயன்பாட்டை தவிர்தல் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி இங்கு மின் இணைப்பாளர்களுக்கு மின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாத்தல் சம்மந்தமான விழிப்புணர்வுகள் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமுர்த்தி மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ். வாசுதேவன் மற்றும்  மின் இணைப்பாளர்கள் அரச உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: