1 Jun 2019

கிழக்கு ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அகியோரை பதவி நீக்கக் கோரி வியாழேந்திரன் எம்.பி உண்ணாவிரப் போராட்டம்.

SHARE
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலிலே  மட்டக்களப்பு மாவட்டம் அடங்கலாக 250 இற்கு மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலிக்கடாவாக்கப் பட்டிருக்கின்றன. 500 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தும், பலர் அதிலே தற்போதும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலோடு தொடர்பு படுத்திப் பேசப்பட்டு வருகின்றவரும். குற்றம் சுமத்தப் படுகின்றவர்களான, அமைச்சர் றிசாட் பதிவுதீன், மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா போன்றவர்கள் உடனடியாக அவர்கள் அந்தப் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும். அவர்கள் அத்தகைய பதவி அதிகாரத்தில் வைத்து அவர்கள் விசாரிக்கப்படக் கூடாது. அவர்கள் மத்தியில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்நாட்டின் பிரதமர் அவர்கள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களை பதவி நீக்குவதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அதுபோல் இந்நாட்டின் ஜனாதிபதி அவர்கள் அவர் நியமித்த கிழக்கு மாகாண ஆளுனரை உடனடியாக பதவி நீக்க வேண்டும். இவற்றுக்காக வேண்டித்தான் நாங்கள் அடையான உண்ணா விரதப்போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றோம்.

என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சர் றிசாட் பதிவுதீன், மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா போன்றவர்கள் உடனடியாக அவர்கள் அந்தப் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும். அவர்கள் அத்தகைய அதவி அதிகாரத்தில் வைத்து அவர்கள் விசாரிக்கப்படக் கூடாது. என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அவரும் அவருடன் இணைந்து சில இளைஞர்களும் சனிக்கிழமை (01) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் Nமுலம் தெரிவிக்கையில்… 

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அவர்கள் அமைச்சர் றிசாட் பதியுதீன், மேல்மாகாண ஆளுனர் அசாத்சாலி, கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா அவர்களையும், உடனடியாக பதவி நீக்கக் கோரி, கண்டி தலதா மாழிகைக்கு முன்னால் இருந்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கு வகையிலும். வலுச் சேர்க்கும் வகையிலும், நாமும் இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.

கடந்த காலத்தில் ஆளுனர் ஹிஸ்புல்லா மற்றும், அமைச்சர் றிசாட் பதியுதீன் போன்றவர்கள், நாடாளுமன்றத்திலும், வெளியிலும் பல இனவாதக் கருத்துக்களைப் பேசி வந்திருக்கின்றார்கள். வடக்கு கிழக்கு இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என ஹிஸ்புல்லா பேசினார், அவரின் அந்த இரத்த ஆறு கனவு ஏப்ரல் 21 ஆம் திகதி நனவாகியது. அதுபோல் இந்து மக்களின் காணியை நானே அதனைப் பறித்து அதிலே பள்ளிவாசல் அமைத்தும், அதிலே மீன் சந்தை அமைத்ததாகவும் ஆளுனர் ஹிஸ்புல்லாலே ஒக்புக் கொண்டுள்ளார். நீதிபதியை மாற்றினேன், தீர்ப்பை மாற்றி எழுதுமாறு நீதிபதிக்குப் பணித்தேன், என்றெல்லாம் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 

நீதிமன்றை அவமத்தித்ததற்காக எஸ்.பி.திசாநாயக்க போன்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள், எனவே இந்நாட்டில் சட்டம் அனைவருக்கும் ஒன்றாக இருக்கவேண்டும், நிதித்துறை சரியாக இயங்க வேண்டும். இப்படிப்பட்டவரை ஜனாதிபதி அவர்கள் கிழக்கு ஆளுனராக நியமித்ததை எம்மால் ஏற்க முடியாது. சில முஸ்லிம் அரசியல்வாதிகள், இவ்வாறான சம்பவங்களில் இருந்து பதிவிகளையும், அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு தப்பித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. நாம் அப்பாவி சிங்கள, மற்றும் முஸ்லிம் மக்களை எதிர்க்கவில்லை. ஆனால் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்ற, ஆளுனர்கள், அமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். 

அரசாங்கம் தங்களுடைய இருப்பைப் பாதுகாப்பதற்காக குற்றவாழிகளைப் பாதுகாக்கக்கூடாது. ஜனாதிபதியும், பிரதமரும் இதற்கு உரிய நடவடிக்கைக் எடுக்கத் தவறினால் இன்னுமொரு ஏப்ரல் 21 ஐ இந்த நாட்டிலே நீங்கள் தடுக்க முடியாது. குற்றத்தேமாடு சம்மந்தப்பட்டவர்கள், பயங்கரவாதத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் இன்னும் இந்த நாட்டிலும், இந்த மாகாணத்திலும், இந்த மாவட்டத்திலும் இருக்கின்றார்கள். திருகோணமலையில் கருத்துடை மாத்திரைகள், தெருவோரங்களில் தெம்பிலி இளநீர் விற்கும் கடைகளில் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே கருவறுக்கின்ற இஸ்லாமிய பயங்கரவாதம் நாட்டிலிருந்து அடியோடு அழிக்கப்பட வேண்டும். 

குற்றவாழிகள் தண்டிக்கப்படல வேண்டும், சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும். இதில் எதுவித பாரபட்டசமும் காட்டப்படல வேண்டும், இதில் ஜனாதிபதியும், பிரதமரும், துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே எமது போராட்டத்தை அரசு உணர்ந்த செயற்பட வேண்டும். யாராக இருந்தாலும் எமது இனம் பாதிக்கப்படுவதை யாராக இருந்தாலும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அழிக்க்பபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மதம் மாற்றக்கடுகின்றார்கனள், நிலங்கள் சூறையாடப்படுகின்றன. அவ்வாறு இனமாற்றப்பட்டவர்தான் புலஸ்தின் இராஜேந்திரன். அந்த பெண்பிள்ளைக்கு மூளைச் சலவை செய்து மதம் தமாற்றி தற்கொலைக் குண்டுதாரியாக்கியுள்ளார்கள். ஒரு வாரத்தில் குமார் 18 பேர் கிழக்கு மாகாணத்தில் இனமாற்றப்படுகின்றார்கள். அரசு தற்கோதுதான் உணர்ந்துள்ளது. என அவர் தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: