20 May 2019

படைப்புழுவின் தாக்கத்தல் பாதிக்கப்பட்ட 95 விவசாயிகளுக்கு இழப்பீடு

SHARE
கடந்த வருடம் மட்டக்களப்பு  மாவட்டத்தில்  செய்கைபண்ணப்பட்ட சோளம் செய்கையில் படைப்புழுவின் தாக்கத்தல்  நூற்றுக்கணக்கான ஏக்கர் சோளம் செய்கை அழிவடைந்தது. இந்த அழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்போது இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு, மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் பிரிவில்  படைப்புழு தாக்கத்தினால் சோளம் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (19.05.2019) விவசாயத் திணைக்களத்தினால் காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 95 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 18 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் காசோலைகள் உரிய விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே. சிவநாதன், கமநல சேவைகள் திணைக்கள உதவி பணிப்பாளர் என். ஜெகன்நாத், மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர்  வீ. பேரின்பராஜா,  மாவட்ட கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி உதவிப் பணிப்பாளர் எம். பாஸ்கரன், மண்டபத்தடி கமநல சேவைகள் பிரிவின் பெரும்பாக உத்தியோகத்தர் எஸ். உதயகுமார் உட்பட விவசாய பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய  போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கான  இழப்பீடுக் கொடுப்பனவை வழங்கி வைத்தனர்.

ஏனைய விவசாயிகளுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் இரண்டாம் கட்டத்தில் வழங்கிவைக்கப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.





SHARE

Author: verified_user

0 Comments: