27 Apr 2019

தீவிரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் முஸ்லிம்கள் நிற்சயமாக அனுமதிக்கமாட்டார்கள்.

SHARE
தீவிரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் முஸ்லிம்கள் நிற்சயமாக  அனுமதிக்கமாட்டார்கள். அதனால்தான்  தீவிரவாதிகள் சம்பந்தமான தகவல்களை வழங்கி அவர்களை பிடித்துக் கொடுப்பதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர் என உள்ளுராட்சி மகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.
சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் இடம்பெற்ற துப்பாக்கி  சூட்டு சம்பவம் தொடர்பில் அக்கிராம மக்களின் பாதுகாப்பு கருதி அக்கிராமத்திலுள்ள  காரியப்பர் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிடுவதற்கு சனிக்கிழமை (27) குறித்த பாடசாலைக்கு வருகை தந்திருந்தார் இவ்வேளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து கருத்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில்….

சாய்ந்தமருதில் இடம்பெற்ற சம்பவமானது வெளிநபர்கள் அங்கு வந்து வீடுகளை வாடகைக்கு எடுத்து இருந்துள்ள பொழுது அங்குள்ள மக்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் சுற்றி வளைத்த போதே இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. 

குறிப்பாக தற்பொழுது பாதுகாப்;பு படையினர் அங்கு அமையப்பெற்றுள்ள விடுகளை  சோதனையிட்டு இவ்வாறான சம்பவத்திற்கு பொறுப்பான சூத்திரதாரிகள் பதுங்கி இருக்கின்றனரா? எனவும் தேடுதல் நடாத்தியிருந்தனர். குறித்த இடத்தில் வசித்துவந்த பொதுமக்கள் பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக தங்கவைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான விடயங்கள் பல அரசியல் வாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய பொலிஸ் உயர் அதிகாரிகள் இச்சோதனை முடிந்த பிற்பாடு அவரவர் வீடுகளில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்துள்ளனர். 
   
குறிப்பாக இந்த சம்பவமானது உண்மையில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவமாகும் இவ்வாறான தீவிரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் முஸ்லிம்கள் நிற்சயமாக என்றும் அனுமதிக்கமாட்டார்கள். அதனால்தான் தாங்கள்  இவ்வாறான தீவிரவாதிகள் சம்பந்தமான தகவல்களை வழங்கி அவர்களை பிடித்துக் கொடுப்பதற்கு தயாராகி வருகின்றனர். 

எனவே பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் பொறுப்பும் அரசுக்கும் படையினருக்கும் இருக்கின்றது என்பதனை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என அவர் இதன் போது தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: