27 Mar 2019

கிழக்கு மாகாண கால்நடை நிருவாகத்தில் குறைபாடுகள் அலுவலர்களுக்கு நியமனங்களை வழங்கி வைத்து ஆளுநர் ஆலோசனை

SHARE
கிழக்கு மாகாண கால் நடை அபிவிருத்தியில் நிருவாகம் பலவிதமான குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற கால் நடை அபிவிருத்தி போதனாசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 26.03.2019 பிற்பகல்  திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

விவசாய திணைக்களத்தின் செயலாளர் கே. சிவனாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட 12 கால் நடை அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார்.

அங்கு புதிய அலுவலர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி விடயத்தில் நடைமுறையிலுள்ள பல பிரச்சினைகள் அதிகாரிகளால் தீர்க்கப்படக் கூடியவை. எனவே மக்களது வரிப்பணத்தில் சம்பளமும் ஓய்வூதியத்தையும் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மக்களுக்காகவே தமது சேவைகளையும் சிந்தனைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

வைபவத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  சரத் அபய குனவர்தன கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளர் அஸங்க அபயவர்தன கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் செயலாளர் யு.எல்.எம். அஸீஸ் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் உள்ளிட்டோரும்  விவசாய அமைச்சு, விவசாயத்  திணைக்களம் ஆகியவற்றின் உயரதிகாரிகளும் நியமனம் வழங்கும் நிகழ்வில் உடனிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: