5 Mar 2019

தொழில்வளங்குனர்களின் எதிர்பார்ப்பும் இளைஞர்களின் இன்றைய நிலையும்

SHARE
பிளான் இன்ரநெஸ்னல் நிறுவனம், மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தனியார் துறை தொழில்வளங்குனர்கள், மற்றும் இளைஞர்களுடன் மற்றும் மாணவர்களுடன் தொடர்புபட்ட அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பயிற்சி நிறுவனங்கள் இணைந்த ஒரு திறந்த கலந்துரையாடலை ஞாயிற்றுக்கிழமை மாலை (02.03.2019)  அன்று கிறீன் காடுனில் பி.ப. 6.00 மணிக் நடாத்தினர்.
இந்த கலந்துரையாடலில் கணினிதுறை, கட்டட நிர்மாணத்துறை, மற்றும் பொதுவான தொழில் வளங்குனர்கள், தொழிலதிபர்கள், பிரதேச செயலக மனிதவள உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் மற்றும் ஏனைய அரச அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இதன்போது தற்போதைய இளைஞர்களின் மனநிலையானது பயிற்சியினை பெற்று ஒரு சான்றிதழினை எடுப்பதனையே குறிக்கோளாக கொண்டு தங்களிடம் மேலதிக களப் பயிற்சிக்கு வருவதாகவும், தொடர்ச்சியாக தொழில் செய்யும் ஆர்வம் அவர்களிடம் குறைவாக உள்ளதாகவும், வெவ்வேறு கவனச்சிதறல்களுடன் மாணவர்கள் இப்போது சென்றுக் கொண்டிருப்பது எமது சமூகத்தின் பொருளாதார வீழ்ச்சிக்க காரணமாகும் என்றும் தொழில் வளங்குனர்களால் தெரிவிக்கப்பட்டது. 

அத்தோடு தொழில் ஆர்வமும் அதற்கு முழு நேரத்தினையும் செலவழித்தால் மட்டுமே வாழ்க்கையின் உயர் நிலையினையும், சாதனைகளையும் நிகழ்த்தமுடியும் என மட்டக்களப்பின் பிரபல தொழில் அதிபர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அத்தோடு மாணவர்களை உள்வாங்கும் போது சரியான முறையில் அவர்களின் ஆர்வத்தினை அடையாளம் கண்டு அதற்கேற்ற பயிற்சிகளுக்கு தெரிவு செய்யும்போது தொடர்ச்சியாக அவர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
அத்தோடு பெற்றோருக்கு உரிய முறையில் விழிப்புணர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அத்தோடு எமது மாணவர்கள், இளைஞர்களிற்கு பல்வேறு வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றது என்றும், அவர்களை சரியான முறையில் வழிநடத்துவதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் மாத்திரமே மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தமுடியும் என்பதாகவே அனைவரின் கருத்துக்களும் காணப்பட்டது.

அரச துறை தொழிலினை மாத்திரமே நம்பிக்கொண்டு தமது காலத்தினை கடத்தாமல் இருக்கும் காலப்பகுதியில் ஒரு திறனைப் பெற்றுக்கொண்டு தமது தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியளவுக்கு வருமானம் ஈட்டல், தொழில் அனுபவம், இளைஞர்கள் சமூகமயமாதல் போன்ற நோக்கங்களை கொண்டே விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது என்றும் இதுவரை கல்லூரியில் பயிற்சிபெற்ற பயிலுனர்களுக்க தனியார் துறையில் தொழில் சந்தர்ப்பத்தினை வழங்கிய தொழிலதிபர்களுக்கு நன்றியை தெரிவித்ததோடு, இவ்வாறு தொழில்தருனர்களுடன் தொடர்ச்சியான தொடர்பினை மேற்கொண்டே எதிர்காலத்தில் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்பரன் இதன்போது தெரிவித்தார். 









SHARE

Author: verified_user

0 Comments: