5 Mar 2019

மீண்டும் மாகாணக்கல்விப்பணிப்பாளராக மன்சூர் நியமனம்!

SHARE


கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளராக மீண்டும் இலங்கை கல்வி நிருவாகசேவையின் முதலாந்தர அதிகாரியான எம்.கே.எம். மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார்.திருகோணமலை உயர்நீதிமன்றும் இன்று(5)வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் அவர் இன்று(5) முதல் மீண்டும் மாகாணக்கல்விப்பணிப்பாளராகிறார்.
 
அவர்     நாளை (6) புதன்கிழமை மீண்டும் தனது பதவியை பொறுப்பேற்கவிருக்கிறார்.
 
இவர் ஏலவே சுமார் 4மாதங்கள் மாகாணக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிவந்தவேளை கடந்த பெப்ருவரி 1ஆம் திகதி தொடக்கம் மாகாணக்கல்விப்பணிப்பாளராக எம்.ரி.எ.நிசாம் நியமிக்கப்பட்டார்.
ஒருமாதகாலகாலமாக ஜனாப் நிசாம் கடமையாற்றிவந்தவேளை  நீதிமன்றத்தீர்ப்பின்பிரகாரம் ஜனாப் மன்சூர் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
SHARE

Author: verified_user

0 Comments: