3 Mar 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் தொடர்பாக கலந்துரையாடல்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் தொடர்பாக கலந்துரையாடல்
விவசாயத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் தொடர்பாக மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கலந்துரையாடல் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்  அலிஸாஹிர் மௌலானா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (02.03.2019) நடைபெற்றது.
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில்  விவசாயத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் தொடர்பாகவும், போட்டியிடும் உலகளாவிய சந்தையில் இலங்கை ஏற்றுமதிகளின் சரியான பங்கு, சூழலை உறுதிபடுத்தல் முகமாக நாடளாவிய ரீதியில் விவசாயத்தை நவீன மயப்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரைரயாடலின்போது திட்டங்களுக்கான நிதிப் பங்கீடு, விவசாயம் மற்றும் மீன்பிடித்தல், இயற்கை வளங்களை  பிரித்தெடுத்தல், சேகரித்தல், தயாரிப்புக்களை மாற்றியமைத்தல் போன்ற   விடயங்கள் ஆராயப்பட்டன.

கலந்துரையாடல் நிகழவில் ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் திட்ட பணிப்பாளர் ரோஹண கமகே, மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார், ஆரம்பக் கைத்தொழில் சமூக மேம்பாட்டு அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.பு.சசிகலா, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் அலுவலக உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: