புதிய கொள்கைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு தகவல் தொழினுட்ப பயிற்றுவிப்பாளர்களின்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் புதிய தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்
புதிய கொள்கைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு தகவல் தொழினுட்ப பயிற்றுவிப்பாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் National Apprentice and Industrial Training Authority (NAITA) புதிய தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது விடயமாக நாட்டிலுள்ள அனைத்து தகவல் தொழில் நுட்ப (ஐ.சி.ரி) பயிற்சிநெறிகளை வழங்கும் போதனாசிரியர்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள்பற்றிக் கேட்டறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது விடயமாக ஞாயிற்றுக்கிழமை 03.03.2019 மேலும் தெரிவித்த அவர்,
தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட பயிற்சி நிலையங்களில் தகவல் தொழில் நுட்ப (ஐ.சி.ரி) பயிற்சி ப் போதானாசிரியர்களாகக் கடமையாற்றுபவர்கள் தாம் இதுகாலவரையில் எதிர்கொண்டும்வரும் முக்கிய குறைபாடுகள் குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
பல வருடங்களாகப் பணி செய்தும் இது காலவரையில் பணி நிரந்தரம் ஆக்கப்படாமை, மருத்துவ விடுகை பெற முடியாமை, கடந்த இரண்டு மாத காலமாகச் சம்பளம் பெறமுடியாமல் இருக்கின்றமை, போதனாசிரியர்கள் தொழில்சார் பயிற்சிகளைப் பெறமுடியாமை போன்ற பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மேலும், கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தி அடையாத மாணவர்கள 13 வருட உத்தரவாதப்படுத்தப்படும் கல்வி திட்டத்தின் கீழ்; தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையி;ன் மூலமாக வழங்கப்படும் ஆளுமை விரத்தப்p பயிற்சி நெறிக்களுக்காக இணைத்துக் கொள்ளப்படுவதில் பல இடர்பாடுகளைச் சந்திப்பதாகவும் போதனாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக இப்பயிற்சி நெறிகளில் சேருவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படும்போது 500 இற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்தாலும் 20 பேருக்கே இடமளிக்கப்படுவதாகவும் போதனரிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பயிற்சி நிலையங்களில் இடவசதி, உபகரணங்கள் இல்லாமை, வளப்பற்றாக்குறை நிலவுதாகவும் போதனாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய குறைபாடுகளைத் தீர்த்து ரவைப்பதற்கு நடைமுறைச் சாத்தியமான கொள்கைத் திட்டங்களை உருவாக்கி பிரச்சினைகளை வெகு விரைவில் தீர்த்து வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
0 Comments:
Post a Comment