3 Mar 2019

களுவாஞ்சிகுடி நந்தவனம் முதியோர் இல்லதிற்கு லயன் கழகத்தினால் குடிநீர் வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

SHARE
களுவாஞ்சிகுடி நந்தவனம் முதியோர் இல்லதிற்கு லயன் கழகத்தினால் குடிநீர் வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள நந்தவனம் முதியோர் இல்லத்தில் இதுவரைகாலமும் பெரும் குறைபாடாகக் காணப்பட்டு வந்த குடிநீர் பிரச்சனைக்கு லயன்ஸ் கழகத்தின் களுவாஞ்சிகுடி நகர் 306 சி2 பிரிவு  அதனை நிவர்த்தி செய்துள்ளது.

லயன்ஸ் கழகத்தின் களுவாஞ்சிகுடி நகர் 306 சி2 பிரிவின் தலைவர் என்.ஆனந்தராஜா அவரின் சொந்த செலவில் இந்த முதியோர் இல்லத்திற்கு தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படுகின்ற குழாய் நீரினை சனிக்கிழமை மாலை (02) லயன்ஸ் கழகத்தின் களுவாஞ்சிகுடி நகர் 306 சி2 ஊடாக பெற்றுக் கொடுத்து அதனை உத்தியோக பூர்வமாக அவ்வில்ல முதியோர்களிப் பாவனைக்கு வழங்கி வைத்துள்ளனர்.

லயன்ஸ் கழகத்தின் களுவாஞ்சிகுடி நகர் 306 சி2 தலைவர் என்.ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னான் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை, லயன்ஸ் கழகத்தின் 306 சி2 பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட பிராந்திய தலைவர் அப்துல்.ஜலீல், நந்தவனம் முதியோர் இல்ல நிருவாகத்தினர் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்த கொண்டிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: