17 Mar 2019

பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரம் உயிரூட்டப்பட பேரினவாதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

SHARE
பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரம் உயிரூட்டப்பட பேரினவாதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் நாயகம் கே. துரைராஜசிங்கம்.

பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரம் உயிரூட்டப்பட இனிமேல் பேரினவாதிகளுக்கு சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளான  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் நாயகமும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் National Apprentice and Industrial Training Authority (NAITA)   இளைஞர்களுக்கான தொழிற்பாதை வழிகாட்டல் தேசிய திட்டத்தின் முதலாவது நிகழ்வு அதன் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தலைமையில் ஏறாவூரில் சனிக்கிழமை 16.03.2019 ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அவர் இந்தக்கருத்தைத் தெரிவித்தார்.

ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு பயிலுநர்கள், தொழிற் பயிற்சிகளை எதிர்பார்த்திருக்கும் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள், அதிகாரிகள் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மத்தியில் துரைராஜசிங்கம்  உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நடாத்திய வேளையில் பல விதங்களில் விமர்சிக்கப்பட்டோம்.
அதேவேளை, எங்களது அனைவரும் பங்கு கொண்ட கிழக்கு மாகாண சபை நல்லாட்சி விமர்சனங்களுக்கு மத்தியில் சிறப்பாகவே செயற்பட்டது.

இந்தக் கிழக்கு மாகாணத்தினுடைய வாழ்வும் நலமும் எல்லாமே கிழக்கு மாகாணத்திலே வாழும் மூவின மக்களின் உறவோடூதான் என்பதை விமர்சிப்பவர்கள் புரிந்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

எங்களுக்கிடையில் குறிப்பாக சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிளவுகள் ஏற்பட்டால் அதுதான் இந்த நாட்டில் பேரினவாதிகளின் வெற்றியாகக் கொண்டாடப்படும்.

பேரினவாத அரசியலாளர்களன் கையாளுகின்ற ஒரு தந்திரோபாயமாகவும் அதுதான் இருந்து வந்துள்ளது.

இதனை ஒவ்வொருவரும் நின்று நிதானித்து உற்று நோக்க வேண்டும்.
முன்பு எங்களை ஆட்சி செய்த “பிரித்தானிய” அரசாங்கம் எங்களைப்“பிரித்துத்தான்” வைத்து ஆட்சி புரிந்தது.
“பிரித்தானியர்கள் பிரித்தாளும்” தந்திரத்தையே கையாண்டமார்கள்.
அது மட்டுமல்ல அவர்கள் நாட்டை விட்டுச் செல்லும்பொழுது தாம் பிரித்தாண்ட பிரித்தாளும் தந்திரத்தையே பேரினவாதிகளிடம் வாரிசு உரிமையாகக் கையளித்து விட்டுச் சென்றார்கள்.
அதனாலேயே தற்போது வரை பிரித்தாளும் தந்திரத்தால் சிறுபான்மையினாரகிய நாம் வதைபட்டுக் கொண்டிருக்கின்றொம்.

குறிப்பாக மாகாண சபை வந்ததற்குப் பிறகு கிழக்கிலே இந்த பிரித்தாளும் தந்திரத்தை முழுமையாக அமுல்படுத்திப் பார்க்கும் இடமாகப் பாவிக்கிறார்கள்.

ஆனால், இந்த பிரித்தாளும் தந்திரோபாயத்தை மேலும் உயிர்ப்பூட்டும் பேரினாவாதிகளின் நடவடிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் இனியொரு போதும் இடமளிக்காது. விலைபோகவும் மாட்டாது என்பதை இவ்விடத்தில் உறுதிபடக் கூறிவைக்கி விரும்புகின்றேன்.

விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு யதார்த்த நிலைக்குத் திரும்பி உறவுகளை வளர்த்துக் கொண்டு நெஞ்சுறுதியுடன் முன்னேற அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன்” எள்றார். 


SHARE

Author: verified_user

0 Comments: