25 Feb 2019

37 வருட ஆசிரியர் சேவையிலிருந்து கணபதிப்பிள்ளை மகாலிங்கசிவம் ஓய்வு!

SHARE

  (க.கிருபாகரன்)

37 வருட ஆசிரியர் சேவையிலிருந்து கணபதிப்பிள்ளை மகாலிங்கசிவம் ஓய்வு!
1982 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை கல்முனை, மட்டக்களப்பு ஆகிய கல்வி மாவட்டங்களில் க.பொ.த.(உயர்தர) கணித, விஞ்ஞான மாணவர்களுக்கு  இரசாயனவியல் பாடத்தைக் கற்பித்து, ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வைத்தியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்களை உருவாக்கியவரும், தலைசிறந்த பேச்சாளரும், வர்ணனையாளருமான கணபதிப்பிள்ளை மகாலிங்கசிவம் தனது முப்பத்தேழு வருடக் கல்விச் சேவையிலிருந்து 60 ஆவது வயதில் 24.02.2019 அன்று ஓய்வு பெறுகிறார்.

இவர் மீன்கள் பாடும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்வளமும், நிலவளமும் ஒருங்கே அமைந்த திருப்பழுகாமத்தில் அவதரித்தார். விஞ்ஞானப் பட்டதாரியான இவர் தன்னுடைய ஆரம்ப, இடைநிலைக் கல்வியை மட்.பட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை மட்.மட்.சிவானந்தா தேசிய பாடசாலையிலும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துப் பல்கலைக ;கழகத்திலேயே தாவரவியல் னுநஅழளெவசயவழச ஆகவும் கடமையாற்றினார். 

1982.05.20 இல் ஆசிரியர் நியமனம் பெற்ற இவர் கமு.கமு.மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலை, மட்.பட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயம், மட்.பட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், மட்.மட்.சிவானந்தா தேசிய பாடசாலை, மட்.மட்.வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை ஆகியவற்றில் ஆசிரியர் பணியைச் சிறப்பாக மேற்கொண்டவர். அத்தோடு 1994 தொடக்கம் 2002 வரை மட்.மட்.சிவானந்தா தேசிய பாடசாலையில் பிரதி அதிபராகவும், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் பணி புரிந்துள்ளார்.

சிறந்த சமூக சேவையாளரான இவர் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளராகவும், திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின் ஆலோசகராகவும், மட்டக்களப்பு மங்கையர்க்கரசியார் இல்லத்தின் தலைவருமாவார். சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்து வரும் இவர் சைவ சமயச் சொற்பொழிவுகளையும், நற்சிந்தனைகளையும் வழங்கி, சைவ சமய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அத்தோடு கந்தபுராணப் பாடல்களுக்குப் பொருள் சொல்பவராகவும், மட்டக்களப்பின் பல்வேறு ஆலய உற்சவங்களை தனது இனிய குரலால் வருணனை செய்து சமயப் பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: