தேசிய மனிதவள அபிவிருத்தி சபையினால் மாபெரும் தொழிற்சந்தையும் வழிகாட்டலும் எதிர்வரும் 28 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் பொருளாதார அமைச்சின் மனிதவளப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் திங்கட்கிழமை (25) தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வு பெரும்பாலும் கல்விப் பொதுத்தர சாதாரண தரம், கல்விப் பொதுத்தர உயர்தரம் சித்தியடைந்த, சித்தியடையாத, தொழிற்சார் பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்; மற்றும் தொழில் தேடும் இளைஞர் யுவதிகள் அனைவரையும் மையப்படுத்தி ஒழுங்குசெய்யப்பட்டுள்ள மாபெரும் செயல்திட்டமாகும்.
இந்நிகழ்வானது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு, கிழக்கு பல்கலைக்கழகம், மனிதவலு திணைக்களம், மாவட்ட வர்த்தக சம்மேளனம், தேசிய வர்த்தக சம்மேளம், முதலீட்டு சபை, மாவட்ட செயலகம்,, அவுஸ்திரேலியன் எய்ட், யூ லீட் நிறுவனம் போன்றவற்றுடன் தொழிற்சார்பயிற்சி நிறுவனங்களால் இணைந்து ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அன்றயதினம் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை இதுஇடம்பெறும்.
சுமார் 3000 இளைஞர் யுவதிகளை மையமாகக்கொண்டு இத்தொழிற்சந்தை வடிவமைக்கப்பட்டுள்ளது, அத்துடன் நாற்பதிற்கும் மேற்பட்ட தனியார்க்கம்பனிகள் மற்றும் அரச, அரச சார்பற்ற தொழிற்சார் பயிற்சி நிறுவனங்களும் பங்குபற்றுகின்றன. சுமார் 5000 இற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்கள் தனியார் நிறுவனங்கள் குவிந்து கிடக்கின்றன. கொழும்பு மற்றும் கிழக்கு பிராந்தியத்தை மையப்படுத்திய பல தொழில்வாய்ப்புக்கள் இளைஞர் யுவதிகளுக்காக காத்திருக்கின்றன. குறிப்பாக சந்தைப்படுத்தல் துறை, சுப்பர் மாக்கட்டுகள் (கார்கீல்ஸ், கீல்ஸ் சுப்பர்), சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை, புடவை கைத்தொழில்துறை, கட்டிட நிர்மாணத்துறை, டயலொக், காப்புறுதித்துறை, வங்கித்துறை (கொமர்சியல் வங்கி, டிஎப்சிசி வங்கி) கண்டி மற்றும் கட்டுநாயக்க வர்த்தக வலயம் மற்றும் பல துறைகளில் வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே கிழக்கு மாகாணத்தில் வாழும் இளைஞர் யுவதிகள் இத்தொழில்சந்தையில் பங்குபற்றி நன்மையடையுமாறு கேட்டுக்கொள்ளுகின்றனர்.
தனியார் கம்பனிகள் மேலும் வரவேற்கப்படுகின்றன. எமது நிறுவனத்தினால் கம்பனிகளுக்கு இந்நிகழ்வில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக அனைத்து உதவிகளும் செய்துதரப்படும். தொடர்டபுகளுக்கு:
சி. தணிகசிலன் (உதவிப் பணிப்பாளர் - 0773320255) த. நாதன் (ஆய்வு உத்தியோகத்தர் 0773677982) என உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment