17 Jan 2019

கற்பிணிதாய்மார்களுக்கு போசாக்கு உலர் உணவுகள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் வழங்கி வைப்பு.

SHARE
கற்பிணிதாய்மார்களுக்கு  போசாக்கு உலர் உணவுகள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் வழங்கி வைப்பு.
போசாக்கு உணவு வழங்க வேண்டும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் தேந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஏகமனதான தீர்மானத்திற்கு இணங்க கற்பிணி தாய்மார்கள்களக்கான போசாக்கு உணவு வழங்கல் இரண்டாம் கட்ட நிகழ்வு புதன்கிழமை (16) மண்முனை தென் எருவில் பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

முண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது சுகாதார வைத்தி அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கற்பிணி தாய்மார்களுக்குமான போசாக்கு உணவு பொதிகள் அவர்கள் சிகிர்ச்சை பெறும் சிகிர்ச்சை நிலையங்களிலும்  பிரதேச வட்டார உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வழங்கிவைக்கப்படுகின்றது.

இப் பிரதேசத்திலுள்ள 14 கிராமங்களில் இருந்து சுhதார வைத்திய அதிகாரிகளினால் தெரிவு செய்யப்பட்ட 423 கற்பவதிகளுக்கு இப்போசாக்கு உணவு பொதிகள் வழங்கப்படுகின்றது. இதற்காக பத்து இலட்சம் ரூபா மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: