3 Jan 2019

அண்மையில் வந்த கல்விப் பொதுத்தர உயர்தரப் பெறுபேறுகளைப் பார்க்கும் போது எமது மாணவர்கள் இன்னும் முன்னேறவேண்டிய தேவை எழுந்துள்ளது –முன்னாள் அமைச்சர் துரைராசசிங்கம்.

SHARE
அண்மையில் வந்த கல்விப் பொதுத்தர உயர்தரப் பெறுபேறுகளைப் பார்க்கும் போது எமது மாணவர்கள் இன்னும் முன்னேறவேண்டிய தேவை எழுந்துள்ளது –முன்னாள் அமைச்சர் துரைராசசிங்கம்.
அண்மையில் வந்த கல்விப் பொதுத்தர உயர்தரப் பெறுபேறுகளைப் பார்க்கும் போது எமது மாணவர்கள் இன்னும் முன்னேறவேண்டிய தேவை உள்ளதைக் எடுத்துக் காட்டி நிற்கின்றது. சமது சகோத இனத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவத்துறையிலே கிட்டத்தட்ட 50 வீத்தைப் பிடித்திருக்கின்றார்கள் எமது பிள்ளைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், என்ன செய்கின்றார்கள் என்ற என்ற கேள்வி நம்முன்னே எழுந்து நிற்கின்றது.இன உணவ்வுடன் சேர்ந்து நாங்கள் படிக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஏன கிழக்கு மாகாண முன்னாள் விவசாய  மைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மண்;முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜின் சொந்த 12 இலட்சம் ரூபாய் நிதியை அப்பகுதியைச் சேர்ந்த வறிய குடும்பங்களிலிருந்து பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களுக்கு அவர்களது பல்கலைக் கழகக் கல்வி முடியும் வரை  5 வருடங்களுக்கு மாதாந்தம் தலா 4000 ரூபா வீதம் வழங்குவதற்கு முன்வந்து புதன்கிழமை (02) அம்மாணவர்களுக்குரிய வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு அவர்களுக்குரிய வங்கிப் புத்தகம் வழங்கி வைக்கும் விகழ்வு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் புதன்கிழமை (02) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்……

சின்னத்தனமாக முகநூல்களில் எழுதுவதாலும், மற்றவரைக் குறைகூறுவதனாலும் நாம் ஒருபோதும் உயர்வடையமாட்டடோம். 30 வருட காலத்தில் நாங்கள் ஒரு திசையிலே போய்க்கொண்டிருந்தபொழுது  எமது சகோதர இனத்தவர்கள் நாங்கள் எவற்றையெல்லம் செய்யவேண்டும் என்பதையல்லாம் சிந்தித்தி எடுத்து சிறப்புத்தேற்ச்சி பெறுகின்றார்கள். ஆவர்கள் உண்மையாகவே அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வந்திருக்கின்றார்கள். துற்போது எமக்கு எல்லா சவால்களோடும், இந்த சவாலும் எழுந்திருக்கின்றது.

எனவே எமது மாணவர்கள் சிறப்பாக கற்று முன்மாதிரியாக திகளவேண்டும். குடந்த கலெத்தில் கல்விக்கு உதவுவதற்கு யாருமில்லாத காலம் இருந்தது. துற்போது கற்றலுக்கு வினோராஜ் போன்றவர்கள் உதவுவதற்கு முன்வந்துள்ளார்கள். எனவே நமது ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக சிறப்புத் தேற்சி பெற்று நல்ல கல்விமான்களாக அதிகாரிகளாக மிளவிவேண்டும் என அவர் தெரவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாக கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குஇசுகுணன், இராசமாணிக்கம் மக்க்ள அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம பெரியோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட கலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.








































SHARE

Author: verified_user

0 Comments: