20 Dec 2018

களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை அபிவிருத்திக்காக பல லெட்சம் ரூபாய் நிதியினை கோரியுள்ளோம் - தவிசாளர்

SHARE
களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை அபிவிருத்திக்காக பல லெட்சம் ரூபாய் நிதியினை கோரியுள்ளதாகவும் அவை கிடைக்கப் பெற்றதும் அதற்கான வேலைகளும் துரிதகதியில் ஆரம்பிக்கப்படும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன் தெரிவித்தார்.
இவ்விடையம் குறித்து தவிசாளர் புதன் கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்….  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி  பொதுச் சந்iதையில் துவிச்சக்கரவண்டி  பாதுகாப்பு நிலையம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாட்களாக விடுக்கப்பட்ட  மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய பிரதேச சபையால் பத்து இலட்சம் ரூபா நிதி ஓதுக்கப்பட்டு வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இத்துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் குளத்தை அண்மித்ததாக அமைக்கப்படுகின்றமைக்கு தங்களது எதிர்ப்பினை அப்பகுதி கமநல அமைப்பு வெளியிட்டிருந்த நிலையில் குறித்த அபிவிருத்தித்திட்ட வேலைகளும், இழுபறி நிலையில் காணப்பட்டு வந்ததுடன் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பி செல்லும் நிலையும் தோன்றியிருந்தது.

இதனையடுத்து இது தொடர்ப்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரும், செயலாளரும் தங்களது ஆதங்கங்களை ஊடகங்கள் வாயிலாக் அண்மையில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இடத்தில் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையம் அமைப்பதற்கு குறித்த கமநல அமைப்பு தற்போது அவர்களது அதரவினை வழங்கியுள்ளார்கள். இதற்கு பிரதேச சபை தவிசாளரும் பிரதேச சபை செயலாளரும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாங்கள் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையின் அபிவிருத்திக்காக பலலெட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். அதுமாத்திரமின்றி தற்போது எதிர்காலத்தில் குறித்த பொதுச் சந்தையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக நாங்கள் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம் அந்த வகையில் இருபது மில்லியன் ரூபாய் நிதியினை கோரி உள்ளுராட்சி அமைச்சிடம் கோரியுள்ளோம். அவை கிடைக்கப் பெற்றதும் அதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் இதற்காக அனைவரும் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் இதன்போது தவிசாளர் மேலும் தெரிவித்தனர் 

SHARE

Author: verified_user

0 Comments: