20 Dec 2018

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்

SHARE
(எம்.எஸ்.எம்.சறூக்)        

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம்இ குளோரின் அகற்றும் மற்றும் இதர நீர் வடிகட்டிகளை (Filtersவிற்பனை செய்யும் எந்தவொரு நிறுவனத்திற்கும் அதனை விற்பனை செய்வதற்கு எதுவித சிபாரிசும் வழங்கவில்லை என்பதனை பொதுமக்களுக்கு அதன் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ.பிரகாஷ் புதன்கிழமை (19) தெரிவித்துள்ளார்.
இவ்விடையமாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது… அண்மைக்காலமாக நீர் வழங்கல் சபையின் இலச்சினை அல்லது நீர் தாங்கியுடனான படம் மற்றும் சபையிடமிருந்து அனுமதி பெற்றுக்கொண்டவாறான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதுடன் அதனை மேற்கொண்டவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் தேசிய நீர் வழங்கல் சபையானது இலங்கையின் தர நிர்ணயம் (SLS 614:2013) மற்றும் சர்வதேச தர நிர்ணயம் (ISO:2008)  ஆகியவற்றின் நியமங்களுக்கேற்ப நீரை சுத்திகரித்து வழங்குவதனால் அந்த நீரிலுள்ள குளோரினையோ அல்லது ஏனைய கனிமங்களையே அகற்ற வேண்டிய எதுவித தேவையும் இல்லை என்பதோடு இது குறித்த விடயத்தில் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ.பிரகாஷ் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: