1 Dec 2018

தன்னிச்சையாக கல்முனை மாநகர மேயர் செயற்படுவதாக கல்முனை மாநகர சபையின் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

SHARE


தன்னிச்சையாக கல்முனை மாநகர மேயர் செயற்படுவதாக கல்முனை மாநகர சபையின் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நேற்றைய அமர்வின் போது நிதி குழு தீர்மானங்களை மாநகர மேயர் ரக்ஹீப் கட்சி சார்ந்து செயற்படுவதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான ஊடக சந்திப்பின் போது ஹென்றி மகேந்திரன், நடைபெற்ற எட்டு அமர்வுகளும் குழப்பகரமான அமைந்திருந்தது. மைனாரட்டியாக மாநகர நிருவாகம் சீரான பக்கச்சார்பற்றதாக செயற்பட முடியவில்லை.

நிதிக்குழு சம்பிரதாயங்களை மீறி சர்வாதிகார போக்குடன் செயற்படுவதாகவும் நிதிக்குழுவில் மாநகர மேயர் கொண்டுவந்த தீர்மானத்தை பெரும்பான்மையை நிருபித்து காட்ட முடியாமல் கட்சி சார்ந்து செயற்படுவது மாநகர சபை கட்டளை சட்டத்தை மீறி செயற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

முதல்வர் அதிகாரத்தை கையிலெடுத்து மாநகர சபை உறுப்பினர்களை மோதவிட்டு தீர்மானங்களை பெரும்பான்மை உறுப்பினர்களது வாக்கெடுப்பின்றி செயற்படுகின்றார்.
மக்கள் நலனுக்காக அரசியல் பாகுபாடுகளை களைந்து புரிந்துணர்வுடன் முதல்வர் செயற்படுவாராயின் அனைத்து உறுப்பினர்கள் இணைந்து செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஆதரவாளர்களின் நிலுவையிலுள்ள வரியினை அறவிடாதிருப்பது தனது கட்சிக்கும் தனக்கும் எதிர்காலத்தில் நிலைநாட்டவேண்டும் என்பதாலே காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டியுற்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: