17 Dec 2018

சிறுபான்மையினரோடு முரண்பட்ட மஹிந்தவை பிரமராக்கியது மைத்திரி சிறுபான்மைக்கச் செய்த துரோகமாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா

SHARE
சிறுபான்மையினரோடு முரண்பட்ட மஹிந்தவை பிரமராக்கியது மைத்திரி சிறுபான்மைக்கச் செய்த துரோகமாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா
சிறுபான்மையினரோடு முரண்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை பிரமராக்கியது மைத்திரிபால சிறிசேன  சிறுபான்மையினருக்குச் செய்த துரோகமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை மற்றும் மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் ஆகியவற்றினால் ஒழுங்கு செய்யப்பட்ட “ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மக்களின் கடமைப்பாடாகும்” எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கும் கலந்துரையாடலும் மட்டக்களப்பு கூட்டுறவுக் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை 16.12.2018 இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் அரச கொள்கை ஆய்வாளரும் அபிவிருத்தித்துறை மதியுரைஞருமான எஸ். பாலகிருஷ்ணன்   வளவாளராகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள அரசியல் ஆர்வலர்கள். அரசியல்வாதிகள், சர்வமத சமாதான செயற்பாட்டாளர்கள், தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலர் கிங்ஸ்லி ராஜசிங்கம்,  உட்பட பலர் கலந்து ஆகியோர் கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவிற்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகள் ஒரு நாட்டின் ஜனநாயக அரசியலை சீரழித்தரிருக்கின்றது.

இதனால் நாட்டு மக்கள் பல இழப்புக்களைச் சந்தித்துள்ளார்கள்.
19வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திலே கொண்டு வந்தவர் அதனை வெற்றிபெறச் செய்வதற்கு மிகவும் பாடுபட்டவர் ஜனாதிபதி மைத்திரிதான்.
அவருக்கு அதன் சட்டம் நன்றாகத் தெரியும்.

மக்களாலே ஆணையிட்டு உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கலைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

இந்த நாட்டின் அரசியல் சீரழிவால் ரணிலோ, மைத்திரியோ பாதிக்கப்படவில்லை . முற்று முழுவதுமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நாட்டு மக்களேதான்.

எதிர்வருக்pன்ற ஜனவரி வரை இந்த இழுபறி நீடிக்குமாக இருந்தால் அரசாங்க உத்தியோகத்தர்கள் கூட அவர்களது சம்பளத்தைப் பெற முடியாத நிலையும் ஏற்படும். வெளிநாட்டு அரசாங்கங்கள் வழங்கிய பொருளாதார உதவிகளும் நிறுத்தப்படும் சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.

தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற நிலையினால் நாடு சீரழிவதை இப்பொழுது  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தடுத்து நிறுத்தியிருக்கிறது. இது கடவுள் கொடுத்த வரமோ என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

இந்த நாட்டிலே ஒரு நல்ல நிலைமையைக் கொண்டு வருவதற்கு இறைவன் வழிவகுத்திருக்கின்றான்.

எனவே. எதிர்வரும் காலங்களிலும் நியாயமான அரசாங்கம் ஏற்பட வேண்டும் என்பதிலே மக்கள் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.
இது போன்றதொரு நிலைமை இந்த நாட்டில் இனி ஒரு போதும் ஏற்பட்டு விடக் கூடாது.

நடைபெற்ற விரும்பத் தகாத விடயங்கள் எங்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.




SHARE

Author: verified_user

0 Comments: