19 Nov 2018

தகைமை பெற்ற பட வரைஞர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள்

SHARE
ஏறாவூர் நகர சபையின் எல்லையினுள் நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் விதிமுறைகளுக்கு அமைவாக கட்டிட வரைபடங்களை வரைவதற்கான படவரைஞர்களை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் தகைமையுடையோர் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டய கட்டிட கலைஞர்கள், பட்டய எந்திரவியலாளர்கள் (குடிசார்). கட்டிட கலைஞர்கள், எந்திரவியலாளர்கள் (குடிசார்), குடிசார் பொறியியல் துறையில் அங்கீகரிக்கப்பட்ட தகைமை உள்ளவர்கள். (HNDE, NDT,NCT)
மேற்குறிப்பிடப்பட்ட தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பிப்பதாயின் அவ்விண்ணப்பங்களை தங்கள் திணைக்கள தலைவர் ஊடாக அனுப்புதல் வேண்டும். அனைத்து தகைமைச் சான்றிதழ்களினதும் பிரதிகள் சமர்பிக்கப்பட வேண்டும்.

தேசிய அடையாள அட்டையின் போட்டோ பிரதி சமர்பிக்கப்பட வேண்டும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தினை சமர்பிக்கும்போது ஆவணங்களின் போட்டோ பிரதியுடன் மூலப்பிரதியினையும் சமர்ப்பித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விண்ணப்ப படிவக் கட்டணம் ரூபா 150.00
நடைமுறைப்படுத்தல் கட்டணம் ரூபா 250.00
பதிவுக் கட்டணம் ரூபா 5000.00
விண்ணப்பங்கள் வழங்கப்படும் திகதி 06.12.2018 வரை இருக்கும்.
விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட வேண்டிய முடிவுத் திகதி 17.12.2018
விண்ணப்பபடிவக் கட்டணமாக ரூபா 150.00 உம் நடைமுறைப்படுத்தல் கட்டணமாக ரூபா 250.00 உம் ஏறாவூர் நகரசபை அலுவலகத்தில் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நகரசபைச் செயலாளர் எம்.ஆர். சியாஹ{ல்ஹக் அறிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: