15 Nov 2018

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஒன்பதாவது அமர்வு – வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஒன்பதாவது (09) அமர்வு வியாழக்கிழமை (15) பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சபை அமர்பின்போது 2019 ஆம் அண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை தவிசாளர் சபையில் சமர்ப்பித்தார். இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செயவுத்திட்டத்தை பிறிதொரு நாளில் விசேட அமர்வு ஒன்றை நடாத்தி அதில் விவாதித்து சபையில் அங்கீகாரம் பெறுவோம் என சபை உறுப்பினர் ஒருவர் முன்மொழிந்ததையடுத்து சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் விசேட அமர்வில் விவாதித்து அங்கீகரிப்பதற்காக இதன்போது பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீதி மின்விளக்குகளைப் பொருத்துதல், வீதிகளைச் செப்பனிடுதல், ஊழியர்களின் சேவை நீடிப்பு, மயானப் பிரச்சனை, உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் பல வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றன.

அனைத்து உறப்பினர்களும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும், பிரச்சனைகள் இருந்தால் அவற்றை நமது சபைக்குக் கொண்டு வந்து அதற்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெற்றுக் கொடுக்க வேண்டும். என இதன்போது தவிசாளர் தெரிவித்தார்.



















SHARE

Author: verified_user

0 Comments: