27 Nov 2018

மாவீரர்களுக்கு இன்று செவ்வாய்க் கிழமை (27) ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

SHARE
மறைந்த இயக்க உறுப்பினர்களை விளக்கேற்றி நினைவு கூருவதில் எதுவித தடை உத்தரவும் இல்லை எனவும் மட்டக்களப்பு நீதவான் நீத்திமன்ற நீதிபதி கட்டளை இட்டுள்ளார்.
இனத்திற்காகவும், மண்ணுக்காகவும் தமது உயிர்களைத் தியம் செய்த மாவீரர்களுக்கு இன்று செவ்வாய்க் கிழமை (27) ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 

அந்தவகையில்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  அமைந்துள்ள தரவை, மாவடிமுன்மாரி, தாண்டியடி, வாகரை, ஆகிய 4 இடங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் புலிகளின் கொடிளோ, சமாத்திகளோ, எல்லைக் கட்டைகள், மற்றும் இயக்க மொழிப்பாடல்கள், என்பவற்றைத் தடை செய்வதாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன், மற்றும் கணேசன் பிரபாகரன் ஆகிய இருவருக்கும், மட்டக்களப்பு நீதவான் நீத்திமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட தடை உத்தரவுக் கடிதம் ஒன்றை திங்கட்கிழமை (26) இரவு 6.45 மணியளவில் கொக்கட்டிச்சோலை; பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் வைத்து அவர்களிடம் கையளித்துள்ளார்.

ஆனால் மறைந்த இயக்க உறுப்பினர்களை விளக்கேற்றி நினைவு கூருவதில் எதுவித தடை உத்தரவும் இல்லை எனவும் மட்டக்களப்பு நீதவான் நீத்திமன்ற நீதிபதி கட்டளை இட்டுள்ளார்.









SHARE

Author: verified_user

0 Comments: