கிழக்கு மாகாண சபை நிருவாகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் 9 வைத்தியசாலைகள் அதன் நிருவாக விரிவாக்கம், சுகாதார மருத்துவ சேவைகளுக்கான தேவைகள், உள்ளக வெளியக
நோயாளர்களின் அதிகரிப்பு, மகப்பேற்று நிலைமை மற்றும் பிரதேச சன அடர்த்தி நிலை என்பனவற்றைக் கருத்திற் கொண்டு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் செயலகம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள இந்த மாகாண வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன.
தற்போது ஆதார வைத்தியசாலைகள் என்ற தரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்
அம்பாறை மாவட்டத்திலுள்ள தெஹியத்தக்கண்டி மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலை, மட்டக்களப்புப் மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை வைத்தியசாலை, திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் வைத்தியசாலை ஆகியவை ஆதார வைத்தியசாலையின் ‘ஏ’ தரத்துக்கும், மேலும் கிழக்கு மாகாணத்தில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களாக(Pசநடiஅiயெசல ஆநனiஉயட ஊயசந ருnவை) இயங்கிக் கொண்டிருக்கும் அம்பாறை - மல்வத்தை நிலையம், திருகோணமலை - வான்எல சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் “சி” தரத்துக்கும், “சி” தரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பதவிசிறிபுர மற்றும் கோமரங்கடவெல வைத்தியசாலைகள் மாவட்ட ‘பி’ தர வைத்தியசாலைகளாகவும், “பி” தரத்தில் இருக்கிக் கொண்டிருக்கும் திருக்கோவில் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகவும்,
“சி” தரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு - மகிழடித்தீவு வைத்தியசாலையை ‘ஏ’ தரத்திற்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சகல வைத்தியசாலைகளுக்கும் அனைத்து வசதிகளும் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறை உட்பட ஆளணி வெற்றிடங்கள், மற்றும் பௌதீக வசதிகள் நிவர்த்தி செய்யப்படுவதற்கு ஏதுவாகவே இவ்வாறு வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment