(க.விஜி)
மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளீர் வித்தியாலய மாணவி செல்வி. சந்திரகுமார் - நிலக்ஷலா அவர்கள் அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்த் தினப் போட்டியில் பிரிவு 05
(தமிழியல் கட்டுரை வரைதல்) போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் அழிக்கமுடியாத வரலாற்றைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
கபொ.த. (உ.த) விஞ்ஞானப் பிரிவில் தரம் 13 இல் கல்வி பயிலும் இம் மாணவி அண்மையில் நடைபெற்ற தேசிய ரீதியான போட்டியில் முதலாம் இடத்தை தட்டிக்கொண்டபோது இவரை பாடசாலை அதிபர் திருமதி. திலகவதி ஹரிதாஸ், உபஅதிபர் திருமதி. கோமளாதேவி கணேமூர்த்தி, பொறுப்பாசிரியை திருமதி. இ. கணகசிங்கம் ஆகியோர்கள் மாணவிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டபோது எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படமாகும்.
0 Comments:
Post a Comment