25 Jul 2016

ஏழை விவசாயிகளின் புன்சிரிப்பு நல்லாட்சிக்கான சமிக்ஞையாகும்- சித்தான்டி அறுவடை விழா நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி.

SHARE
ஏழை விவசாயிகளின் புன்சிரிப்பே நல்லாட்சிக்கான சமிக்ஞையாகும். இந்த நல்லாட்சி அரசாங்கம் விவசாயிகளின் நலன்கருதி செயற்படுகின்றது என்பதனை நீர்ப்பாசன இணைப்புத்திட்டம்
நிறுவி நிற்கிறது. என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (24) சித்தான்டி,சின்னவெளி, சின்னாளன்வெளி கண்டத்தினால்  ஏற்பாடு செய்த    அறுவடை நிகழ்வில் கெளரவ அதிதியா கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்

இந்த நல்லாட்சியை கொண்டு வருவதில் சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டோம். அந்த ஒற்றுமை எதிர்காலத்திலும் நீடித்து நிலைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்போது தான் நமது பொதுப்பிரச்சினைகளுக்கான தீர்வினை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்.


இந்த நல்லாட்சியின் ஜனாதிபதி ஒரு விவசாய மகன். அவருக்கு விவசாயிகளின் பிரச்சினை, அவர்களின் கஷ்டம், துன்பம் என எல்லாம் தெரியும். அத்தோடு இந்த நல்லாட்சியின் பிரதமர் செயற்திறன் மிக்கவர். விவசாய நடவடிக்கைகளில் விவசாயிகள் பற்றி தெளிவாக தெரிந்தவர். இந்த அரசின் செயற்பாடுகள், நம் நாட்டின் முதுகெலும்புகளான விவசாயிகளை முன்னேற்றுவதும், புதிய தொழிநுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து, அந்தத்  தொழிநுட்பங்களை பிரயோகிப்பதற்கான பயிற்சியினை வழங்குதும் ஆகும் . இந்த விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

நல்ல திட்டங்களை யார் கொண்டு வந்தாலும் அதனை நான் வரவேற்கிறேன், அதனை வாழ்த்துகிறேன், அந்த திட்டங்கள் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன். அத்தோடு அவைகளுக்காக எனது ஒத்துழைப்பையும் நான் வழங்குவேன். கடந்த காலங்களில் மிகக்கொடூரமான யுத்தத்திற்கு முகம் கொடுத்து இந்தப்பிரதேசம் விவசாயத்திலும்,கல்வியிலும்,வியாபாரத்திலும் நலிவடைந்து போயுள்ளது.இதனை சரி செய்து நிமிர்த்துவது இந்த நல்லாட்சியினதும், அதன் பங்காளர்களான எமதும் தலையாயக் கடமையாகும். நீர்பாசன இணைப்புத்திட்டத்திட்டத்தினால் இம்முறை அறுவடை அதிகம் பெற்றதாகவும்,விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைத்ததாகவும், இந்தப்பிரதேசத்து விவசாய சங்கத்தலைவர் கூறினார். இவ்வாறான விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற திட்டங்களை நான் வரவேற்கிறேன். இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சி செய்த எல்லாத்தரப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த நல்லாட்சியை கவிழ்க்க எதிர்வரும் 28 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை, நல்லாட்சியின் எதிரிகளால் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிகிறோம். அவர்கள் கடந்த அரசில் மக்களை சுரண்டி வாழ்ந்த ஊழல்மிக்கவர்கள், தங்களை பாதுக்காவும்,தாம் ஒளிந்து கொள்ளவும் இடம் தேடுகிறார்கள். இந்த விடயத்தில் சிறுபான்மையினரான நாம் ஒற்றுமையுடனும்,விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். அவர்களின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு, செய்த ஊழலுக்கான தண்டனைகளை பெறும் காலம் மிகவிரைவில் வரும். எனவே இந்த நல்லாட்சியை பாதுகாப்பதில் நாம் இணைந்து செயற்படுவோம் என கூறினார்.

இந்நிகழ்வில் நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித விஜிதமுனி சொய்சாநாடாளுமன்ற, உறுப்பினர்களான  அலி ஸாஹிர் மௌலானா மற்றும் வியாழேந்திரன், முன்னாள் பிரதியமைச்சர் உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் , கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்  கி.துரை ராஜசிங்கம், மாகாணசபை உறுப்பினர் சுபையிர்நீர்ப்பாசன  அமைச்சின் செயலாளர்  ரத்நாயக்க , உதவி மாவட்ட அரசாங்க அதிபர் சி.கிரிதரன் மற்றும் நீர்ப்பாசன  அமைச்சின் அதிகாரிகள், பிரதேசத்து விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: