19 Jul 2016

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் சமூர்த்தி ‪பயனாளிகளல்லாத 500 பேருக்கு இலவச குடிநீர் இணைப்பு.

SHARE
மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சமூர்த்தி ‪பயனாளிகள் அல்லாத 500 குடியிருப்பு வீடுகளுக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் செலுத்தி இலவச குடிநீர்
இணைப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்தியக் காரியாலயம் அறிவித்துள்ளது.

‪ஏறாவூர் பிராந்தியக் காரியாலயத்தினால் ‎செவ்வாயன்று (19.07.2016) விடுக்கப்பட்ட முக்கிய ‎அறிவித்தலில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரையில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிநீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்ளாத, ‪சமுர்த்தி பயனாளியல்லாதவர்களுக்கான இலவச குடிநீர் இணைப்புக்கள் முதலமைச்சரினால் இலவசமாக வழங்கப்படவிருக்கின்றன.
எனவே, சமூர்த்திப் பயனாளிகள் அல்லாத குடியிருப்பாளர்கள் தங்களது விவரங்களை கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்திய அலுவலகத்துக்குச் சென்று பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE

Author: verified_user

0 Comments: