20 May 2016

வெருகல் பிரதேச செயலாக ஊழியர்கள் பயணித்த வாகனத்தை இடைமறித்து அச்சுறுத்திய இ.போ.ச சரதிக்கு வாகனம் செலுத்தத் தடை, நீதிமன்றம் தீர்ப்பு

SHARE
பிரதேச செயலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியை மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இடைமறித்து அச்சுறுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதிக்கு அவ் வீதியில் வாகனம் செலுத்துதற்கு தடைவிதித்து  மூதூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் தீர்ப்பளித்துள்ளார்
மூவாயிரம் ரூபாய் தண்டாப்பணம் செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறின் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் மேலும் அத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பினை உறுதிப்படுத்தும் முகமாக டிப்போ முகாமையாளரிடம் இருந்து அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.
  
அது மாத்திரமின்றி  பிரயாணிகள் தங்கள் விருப்புக்கேற்ப தங்களது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எவரும் குறித்த வஸ்சில் பயணிக்கும் படி நிற்பந்திக்க முடியாது எனவும் இதன் போது சாரதிக்கு நீதிவான் ஆலோசனை வழங்கியுள்ளார்  

இலங்கை போக்கு வரத்து சபையின் ஏறாவூர் டிப்போவுக்கு சொந்தமான  பஸ் வண்டி சாரதிக்கே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 
வெருகல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பு, மண்டூர், பழுகாமம், போன்ற பிரதேசங்களை சேர்ந்த  ஊழியர்களை ஏற்றி செல்வதற்காக தனியார் விசேட பஸ் சேவை ஒன்று பிரதேச செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டு தினமும் களுவாஞ்சிகுடியில் இருந்து வெருகல் பிரதேச செயலகம் வரை இடம் பெற்று வந்தது.  
இவ்வாறாக ஊழியர்கள் பயணித்த பஸ் வண்டியை இடைமறித்த குறித்த பஸ்வண்டி சாரதி அதில் பயணித்த ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார். சாரதியின் நடவடிக்கை தொடர்பாக சேருநுவர பெலிசில் பிரதேச செயலாளர் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் பிரகாரம் சாரதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது………
SHARE

Author: verified_user

0 Comments: