30 Apr 2016

அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, ரவூப் ஹக்கீமை ஆகியோர் சந்தித்து பேச்சு

SHARE
ஹம்பாந்தோட்டையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாகவும், நிலக்கீழ் நீர் பற்றாக்குறை காரணமாகவும் அந்த மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்
பிரச்சினைகள் தொடர்பாகவும், நடைமுறையிலுள்ள மற்றும் உத்தேச நீர் விநியோக திட்டங்களை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் செவ்வாய்க்கிழமை (26) சந்தித்து கலந்துரையாடினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச முன்வைத்த கோரிக்கைகளை கவனமாக செவிமடுத்த அமைச்சர் ஹக்கீம் அவற்றுக்கான நடவக்கைகளை இயன்றவரை துரிதமாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் 240 மில்லியன் ரூபா செலவில் பந்தகிரிய நீர்விநியோகத் திட்டம் மற்றும் 393 மில்லியன் ரூபா செலவில் திஸ்ஸமஹாராம நீர் விநியோகத்திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களையும் துரிதமாக செயல்படுத்துவது பற்றியும் ரீதிகம, கட்டக்கடுவ, கிரம நீர் விநியோகத்திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

இந்த விடயங்களில் அமைச்சர் ஹக்கீம் செலுத்தும் அக்கறைக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்தார். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் என்.டீ. ஹெட்டிஆராச்சி, இரு அமைச்சுகளினதும் உயர் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். 

SHARE

Author: verified_user

0 Comments: