30 Apr 2016

நிதி ஒதுக்கீடுகள், மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நிலையில்தான் நாம் ஆட்கியைக் கொண்டு செல்கின்றோம் - மட்டக்களப்பில் கிழக்கு முதலமைச்சர்.

SHARE
நாங்கள் கிழக்கிலே ஆட்சியைப் பொறுப்போற்ற போது பல ஆயிரக் கணக்கான பிரச்சனைகள் எம்மீது சுமத்தப்பட்டிந்தன  ஆனால் அதிகாரம் என்ற போர்வை மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடுகளும், மறுக்கப்பட்டு,
ஒடுக்கப்பட்ட நிலையில்தான் பிரச்சனைகளை எமது தலையிலே சுமத்தித் கொண்டு நாங்கள் இந்த ஆட்சியைக் கொண்டு செல்கின்றோம். ஆனால் எமது ஆட்சிக்காலத்தில் சகல பிரச்சனைகளுககும் தீர்வு பெறும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் 1143 ஆசிரியர்களுக்கான 3 மாதக் கொடுப்பனவு வியாழக் கிழமை (28) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்….

மாகாண சபைக்கு அதிகாரங்கள் பரவலாக்கப் பட்டிருப்பது தொடர்பில் எழுத்து மூலங்கள் இருந்தாலும் நிதி ஒதுக்கீடுகளில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. 95 வீதமான பாடசாலைகள் மாகாண அதிகாரங்களுக்குள் இக்கின்றன. ஆனால் 95 வீதமான நிதி ஒதுக்கீடுகள் மத்திய அரசின் கீழ் உள்ளமை ஒரு வரலாற்றுத் துரோகமாகும். இது கல்வி அமைச்சிற்கு மத்ததிரமான செயற்பாடுகள் இல்லை மாகாணத்திலே இருக்கின் பெரும்பாலான அமைச்சின் கீழுள்ள செயற்பாடுளுக்கான ஒதுக்கீடுகள் இவ்வாறுதான் நடக்கின்றன.

மாகாண சபையில் அதிகாரமுள்ளது என எழுத்துக்களில் கூறிவிட்டு, நிதி ஒதுக்கீடுகளை மத்திய அரசின்கீழ் வைத்திருக்கும் காணத்தினால்தான் நாட்டில் பிரச்சனைகள் எழுகின்றன என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். மத்திய அரசினால் பாரிய நிதி ஒதுக்கீடுகள் எமது மாகாண சபைக்கு வழங்கப்படுமாக இருந்தால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகளை 3000 இத்திலிருந்து 15000 ரூபாவாக உயர்த்திருக்க முடியும். எனவே வெறுமனே அதிகாரம் மாத்திரம் இருந்த போதாது நிதி ஒதுக்கிடுகளும், எமக்குத் தேவை இது தொடர்பில் பல இடங்களிலும் பேசி வருகின்றேன்.

மாகாண சபைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்களை விட ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த மதலமைச்சர்களும் போராட்டி வருகின்ற நிலமையை நாம் மாற்றி இருக்கின்றோம்.

நாங்கள் கிழக்கிலே ஆட்சியைப் பொறுப்போற்ற போது பல ஆயிரக் கணக்கான பிரச்சனைகள் எம்மீது சுமத்தப்பட்டிந்தன  ஆனால் அதிகாரம் என்ற போர்வை மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடுகளும், மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நிலையில்தான் பிரச்சனைகளை எமது தலையிலே சுமத்தித் கொண்டு நாங்கள் இந்த ஆட்சியைக் கொண்டு செல்கின்றோம். ஆனால் எமது ஆட்சிக்காலத்தில் சகல பிரச்சனைகளுககும் தீர்வு பெறும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இந்த நாட்டிலே உள்ள பிரச்சனைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதற்றாக ஜனாதிபதியும், பிரதமரும் திடசங்கற்பம் பூண்டுள்ளார்கள். அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம், ஆகிய 4 முக்கிய தலைவர்களும், சில விட்டுக் கொடுப்புக்களைக் கொடுத்து இந்நாட்டிலுள்ள பிரச்சனைக்குத் தீர்வு பெறவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

வர இருக்கின்ற தீர்வு திருப்திப் படுத்துவதாகவே வரவேண்டுமே தவிர தனி நபரையோ தனிக் கட்சியை திருப்திப் படுத்துவதாக வரமுடியாது. இதனை விட்டுக் கொடுப்பு என்பதால் மாத்திரம்தான் நிரந்தர சமாதானத்தையும், சிறந்த தீர்iவையும் பெற்றுக்கொள்ள முடியும்.

பல வருடகாலம் நாம் ஏமாற்றப் பட்டுள்ளோம், கட்சிகளுக்குள் பிரச்சனைகளை மூடிட்டி விடப்படு, எமது கால்களுக்கள் கட்டுப் போட்டிவிட்டு பிரச்சனைகளுக்காகத் தீர்வு காணாமல் ஏமாற்றப்பட்டோம் இந்த வரலாற்றை தலைமைகள் உணர வேண்டும். எனவே இனிமேலும் புரையோடிப் போயுள்ள எமது பிரச்சனைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்காமல் வரலாற்றுத் துரோகங்களை இளைத்து விடக்கூடாது.

வரஇருக்கின்ற தீர்வு மாகாண சபைகளுக்கு இருக்கின்ற காணி பொலிஸ், போன்ற பல அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்ட திர்வாக அமையும் என எமக்கு நம்பிக்கை இருக்கின்றது. என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: